உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடத்தை காண

இன்று ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை காண்போம்.இன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம் என்ற ஒரு மந்திரச்சொல் தான். இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை. இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் கேபில்களாலும், செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75% நீரினால் சூழ்ந்துள்ளதால் இந்த கேபிள்களை கடலுக்கு அடியில் தான் பெரும்பாலும் கொண்டு செல்கிறார்கள். செயற்கைகோள்கள் 1 சதவீதம் தான் இணைய இணைப்பில் பங்கு பெற்றுள்ளது. மீதம் 99சதவீதம் இணையம் கேபிள்களை கொண்டே இணைக்கப்படுகிறது. இந்த இன்டர்நெட் கேபிள்கள் எப்படி கடலுக்கு அடியில் மற்ற நாடுகளுக்கு இணைக்க படுகிறது என்ற வரைப்படத்தை காணலாம்.

இந்த வரைப்படத்தை சுலபமாக காண நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது. இந்த தளத்திற்கு சென்றால் உலகில் அனைத்து நாடுகளுக்கும் இணைய இணைப்பிற்கான வரைபடம் காணப்படுகிறது.

இதில் உங்களுக்கு தேவையான நாடுகளில் கிளிக் செய்தால் பெரியதாகி காட்டும். மற்றும் வலது பக்கத்தில் ஒவ்வொரு நாடுகள் வரிசையிலும், இணைய இணைப்பு நிறுவனங்களும் இருக்கும் அவைகளில் கிளிக் செய்து மேலும் சில தகவல்களை பெறலாம்.
இந்த தளத்திற்கு செல்ல- Under Sea Cable

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க