விரல்கள் மீட்டும் விண்டோஸ் 8

கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஐகான்களுக்குப் பதிலாக ஓடுகள் வடிவிலான கட்டங்கள், மவுஸ் கிளிக் இடத்தில் விரல் தொடுதல், மெனுக்கள் போல்டர்கள் என்று அடுக் கடுக்கான குகைக் கட்டங் களுக்குப் பதிலாக, பொருள் புதைந்த பெரிதாக்கும் வசதி எனப் பல புதிய சிறப்பம்சங்கள், பயனாளர் களைப் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளன.

மைக்ரோசாப்ட் தளத்தில் யார் வேண்டுமானாலும் இதனை டவுண் லோட் செய்து, சோதனை செய்து பார்த்திடலாம்.


மைக்ரோசாப்ட் தளத்தில் யார் வேண்டுமானாலும் இதனை டவுண் லோட் செய்து, சோதனை செய்து பார்த்திடலாம்.

இதில் பல சிறப்பு அம்சங்கள் அறிமுகமாகியுள்ளன. அவை பயனாளர்களுக்கு புதிய வசதிகளைத் தருவனவாக மட்டுமில்லாமல், தொழில் நுட்ப வல்லுநர்களைப் புதிய வழிமுறைகளுக்கு அழைத்துச் செல்வதாகவும் உள்ளன.

முதலாவதாக, இன்டெல் மற்றும் ஏ.ஆர்.எம். என இரண்டு நிறுவன சிப்களிலும் விண்டோஸ் 8 இயங்கும். இதன் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, ஐ-பேட் வகை டேப்ளட் பிசிக்களிலும் பயன் படுத்தலாம். இது ஸ்மார்ட் போன்களில் இயங்காது; ஆனால் விண்டோஸ் 7 போனில் இயங்கும்.

ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கும் விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்கள், புதிய புரோகிராம்களை மட்டுமே இயக்கும். ஆனால், பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப் பில் வடிவமைக்கப்படும் புதிய புரோகிராம்கள் மட்டுமின்றி, ஏற்கனவே விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கி வந்த புரோகிராம் களையும், விண்டோஸ் 8 இயக்கும். ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கு கையில், பழைய விண்டோஸ் அப்ளிகேஷன்கள் இயங்காது.

இதனுடைய யூசர் இன்டர்பேஸ் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஐகான்கள் நிறைந்த திரைக்குப் பதிலாக, ஓடுகள் பதிக்கப்பட்ட ஒரு சுவராக திரை காட்டப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் live data, application screens, communications screens போன்றவை இருக்கும். இவற்றின் மீது தொட்டாலோ, கிளிக் செய்தாலோ, அவற்றிற்கான திரை மேலும் விரிந்து அப்ளிகேஷன்களைக் காட்டிப் பயனாளரை அழைக்கும்.

இதனை மெட்ரோ (Metro) யூசர் இன்டர்பேஸ் என மைக்ரோசாப்ட் பெயரிட்டுள்ளது. விண்டோஸ் 7 போனுக்கென அமைக்கப் பட்ட வடிவமைப்பில் பெரும்பகுதி இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடுதிரை வழி உள்ளீடு செய்திடும் வகையில் இது உள்ளது என்றாலும், வழக்கம் போல கீ போர்டு மற்றும் மவுஸ் வழியிலும் இதனை இயக்கலாம். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் சினோப்ஸ்கி கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தொடுதிரைப் பயன்பாடு அனைத்திலும் நுழைந்துவிட்டது.

ஓர் இடத்தில் இருந்து இயக்காமல், எங்கும் எடுத்துச் சென்று இயக்கும் செயல் வேகம் கையாளப் படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் வடிவம் அளித்திட முடிவு செய்து, விண்டோஸ் 8ல் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடுதிரை தொழில் நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால், ஆக்ஸில ரோமீட்டர், என்.எப்.சி. தகவல் தொடர்பு போன்றவை சிறப்பாக இயங்கும். அத்துடன் வை-பி, 3ஜி நெட்வொர்க், பிரிண்டிங் ஆகியன ஒன்றோடொன்று இணைந்து இயக்கப்படும். ஸ்டோரேஜ், விண்டோஸ் லைவ் க்ளவுட் சேவை ஆகியனவும் இணைந்து இயங்கும்.

விண்டோஸ் 7 சிஸ்டம் 404 எம்பி இடத்தை ராம் மெமரியில் எடுத்தது. ஆனால் விண்டோஸ் 8, 281 எம்பி இடத்தையே கொண்டுள்ளது.

இதுவரை எச்.டி.எம்.எல். தொழில் நுட்பம் கொண்டிராத இன்டர்நெட் எக்ஸ்புளோரர், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வருகையில், அதனையும் கொண்டிருக்கும்.

புரோகிராம்களை வடிவமைப்பவர் களுக்கு, இந்த முறை அதிக ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொழி யினைத்தான் அல்லது தொழில் நுட்பத்தினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றில்லாமல், பலவகை ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. C#, XAML, மற்றும் HTML5 என எதனையும் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் 256 டெரா பைட் அளவுள்ள ஹார்ட் டிஸ்க் வரை எதிர் கொண்டு சப்போர்ட் செய்திடும்; மொபைல் போன் செயல்பாடு போல, மின்சக்தியை மிச்சப்படுத்த பல வழிகள் தரப்பட்டுள்ளன. வீடியோ கான்பரன்சிங் வசதிக்கென கேமரா இதில் பதிக்கப்பட்டு இயங்கும்.

ஓடுகளால் ஆன இந்தக் கட்டங்கள், ஐகான்களைக் காட்டிலும் அதிக தகவல் தருபவையாக இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் அது சார்ந்த புரோகிராம் களின் தகவல்கள் அப்டேட் செய்யப் பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சீதோஷ்ண நிலை குறித்த அப்ளிகேஷன் அப்போது என்ன தட்ப வெப்ப நிலை என்று காட்டும்.

இமெயில் புரோகிராம் உள்ள கட்டம் எத்தனை இமெயில்கள் புதியதாய் உள்ளன என்று சொல்லும். நம் பயன்பாட்டிற்கு ஏற்றபடி இந்த கட்டங்களை இழுத்துப் போட்டு இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒரு குழுவாக அமைக்கலாம்.

சமுதாய உறவு தரும் தளங்களை இணைக்கலாம்; கேம்ஸ் மட்டும் ஒரு கட்டத்தில் கொண்டு வரலாம். இதனாலேயே, இந்தக் கட்டங்களை விரித்துப் பார்ப்பதை மைக்ரோசாப்ட் “semantic zooming” என அழைக்கிறது. எந்த அப்ளிகேஷன் எங்கு உள்ளது என்பது மறந்து போனால், search மூலம் தேடி அறியலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன் கிடைக்கும் திரையில், அப்போதைய நேரம், தேதி, தனிநபர் தகவல்கள், புதிய இமெயில் எண்ணிக்கை, செயல்படுத்த வேண்டிய அடுத்த அப்பாய்ண்ட்மெண்ட் எனப் பல தகவல்கள் காட்டப்படுகின்றன. தொடர்ந்து பயன்படுத்த, பயனாளர் யார் என அறியும் சோதனைப் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கம்போல பாஸ்வேர்ட், எண்களால் ஆன தனி நபருக்கான எண் தொகுதி, படமாக அமைந்த பாஸ்வேர்ட் எனப் பல வழிகள் உள்ளன. பட பாஸ்வேர்ட் எனில், அறிந்த படம் ஒன்று புள்ளிகளால் தரப்பட்டு, பயனாளர் இணைப்பதற்குக் காத்திருக்கிறது. தங்கள் விரல்களால் இவற்றைச் சரியாக இணைத்தாலே, கம்ப்யூட்டரை இயக்க வழி கிடைக்கிறது.

தன் ஆபீஸ் தொகுப்புகளில் உள்ள ரிப்பன் மெனுவினை மீண்டும் விண்டோஸ் 8ல் தந்துள்ளது மைக்ரோசாப்ட். ஆனால் இதில் நிறைய கூடுதல் வசதிகள் உள்ளன. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில், மெனு மாற்றி மெனு செல்லாமல், பைல்களைத் தேடிப் பெற முடியும்.

புதிய பி.டி.எப். ரீடர் ஒன்று “Modern Reader” என்ற பெயரில் தரப்படுகிறது. அதே போல, டாஸ்க் மானேஜர் மாற்றி அமைக்கப்பட்டு “Modern Task Manager” எனப் புதியதாக ஒன்று இயக்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் தந்துள்ள இன்னொரு உறுதி மொழியை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்க ஹார்ட்வேர் தேவைகள் எதுவும் அதிகரிக்கப்படவில்லை. விண்டோஸ் 7 இயங்கிக் கொண்டிருக்கும் எந்தக் கம்ப்யூட்டரிலும் விண்டோஸ் 8 இயங்கும். சற்றுக் குறைவான அளவில் ஹார்ட்வேர் அமைப்பு இருந்தாலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்டோஸ் 8 தற்போதைய பயனாளர்கள் அனைவராலும் மேற்கொள் ளப்படும் என எதிர்பார்க் கலாம்.

மைக்ரோசாப்ட் தளத்தில் புரோகிராம் டெவலப்பர்களுக்காகவும், சோதனை செய்து பார்ப்பவர்களுக்காகவும் விண்டோஸ் 8 கிடைக்கிறது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க