PDF பைலை பூட்ட,திறக்க,ஒட்ட,வெட்ட சிறந்த மென்பொருள்
நாம்
நம்முடைய விவரங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய செய்திகளையோ PDF பைலாக
மாற்றி வைத்திருப்போம். சாதரணமாக நாம் உருவாக்கும் PDF பைல்களை அனைவரும்
Print எடுக்கும் வகையிலும் காப்பி செய்யும் வகையிலும் உருவாக்குகிறோம்.
அதனால் நம் பைல்கள் மாற்ற படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி யாரும்
திறக்காதவண்ணம் நாம் பூட்டு போடுவது என்று இங்கு காணலாம்.
உபயோகிக்கும் முறை:
- கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொண்டு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
- இந்த மென்பொருள் வெறும் 5MB அளவே கொண்டது.
- இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். continue Trial என்பதை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் முதலில் Add என்பதை க்ளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொண்டு Lock என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.இதில் உங்கள் பைலுக்கு Password தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு தேவையான Password கொடுத்து உங்கள் pdf பைலை பாதுகாப்பானதாக மாற்றி கொள்ளுங்கள்.
- அடுத்து உங்கள் pdf பைலில் நிறைய பக்கங்கள் இருக்கலாம் ஒரு ஒரு பக்கத்தையும் தனித்தனியாக பிரிக்க இதில் உள்ள Split என்ற வசதி பயன்படுகிறது.
- அதற்கு முதலில் உங்கள் pdf பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து Split என்று இருக்கும் பட்டனை ஒரு க்ளிக் செய்தாலே போதும் உங்கள் பைலின் பக்கங்கள் தனி தனி பைல்களாக மாறிவிடும்.
- அடுத்த வசதி Merge வசதி இந்த வசதி வெவ்வேறான PDF பைல்களை ஒன்றாக ஆக்க பயன்படுகிறது. இவைகள் அனைத்தும் சுலபமான வேலை என்பதால் அதிக விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.
- சரி இந்த முறையில் நீங்கள் பூட்டு போட்ட pdf பைல் பாதுகாப்பானதா என அறிய வேண்டுமா உங்கள் PDF பைலை திறந்து கொண்டு கீழே உள்ள முறையில் சென்று பாருங்கள் அனைத்தும் தடை செய்ய பட்டிருக்கும்.
- இந்த பைலை UNLOCK செய்ய பைலை தேர்வு செய்து கொண்டு உங்கள் password கொடுத்தால் திறந்து விடும்.
இது நல்ல மென்பொருள். இதில் உள்ள பிரச்சினை என்றால் இது trail version 30 நாட்கள் வேலை செய்யும்.
டுடே லொள்ளு
இன்னாவோ சொல்ல வருது ஆனா முடியல பாவம் ஆண்டவன் இந்த பொண்ணுக்கு பேச்சை கொடுக்க வில்லையே என்ன பண்றது.
Comments