கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக- Ashampoo Uninstaller 4

இந்த சேவையில் சிறந்து விளங்குவது Ashampoo Uninstaller என்ற மென்பொருள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல இதன் விலை $49.99 (இந்திய ரூபாயில் சுமார் Rs.2000/- மேல்). ஆனால் இப்பொழுது ஒரு புதிய சலுகையாக இந்த மென்பொருளை இலவசமாக வழங்கு கின்றனர். அதை எப்படி பெறுவது என பார்ப்போம். மற்றும் போனசாக Ashampoo Undeleter மென்பொருளின் சீரியல் எண்ணும் இலவசமாக கிடைக்கிறது.
Step:1
- முதலில் இந்த தளத்திற்கு Ashampoo Promotional Page செல்லுங்கள் அந்த தளம் ஜெர்மன் மொழியில் இருக்கும் ஆக்நிலத்தில் தேவை என்றால் translate செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து அங்கு உள்ள சிறிய கட்டத்தில் உங்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து send பட்டனை அழுத்தவும்.
Step:2
- அடுத்து உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள். இந்த மெயில் வர குறைந்த பட்சம் 2 நாளில் இருந்து அதிகபட்சம் 7 நாட்கள் வரை ஆகும் (எனக்கு 5 நாள் கழித்தே வந்தது). அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.

- மொழி ஆங்கிலம் என்பதை தேர்வு செய்ய மறக்க வேண்டாம். பூர்த்தி செய்து கீழே உள்ள OK,send என்ற பட்டனை அழுத்தவும்.
- அதை அழுத்தியவுடன் உங்களுக்கு உடனிடியாக ஒரு சீரியல் எண் கொடுப்பார்கள். சீரியல் என்னை உங்கள் மெயிலுக்கும் அனுப்புவார்கள். பிறகு இந்த லிங்கில் Ashampoo Uninstaller 4 சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

- மென்பொருளை உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கேட்டால் இந்த எண்ணை காப்பி செய்து அதில் Register செய்து விடவும்.
Download
அவ்வளவு தான் Un Installer மற்றும் Un Deleter என்ற இரண்டு கட்டண மென்பொருட்களை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.
Comments