போட்டோஷாப் -விதவிதமான ஸ்டைல் எழுத்துக்கள்

விதவிதமான டிசைன்களில் நாம் எழுத்துக்கள் கொண்டுவந்தாலும் ரெடிமேடாக கிடைக்கும் ஸ்டைல்களே அழகு அதிகம். போட்டோஷாப்பில் பயன்படும் விதவிதமான ஸ்டைல்களில் சுமார் 15 ஸ்டைல்கள் இங்கே இணைத்துள்ளேன்.1 எம்.பிக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.போட்டோஷாப்பினை திறந்துகொள்ளவும். வேண்டிய அளவினில் புதிய விண்டோவினை திறந்துகொள்ளவும்.தேவையான வார்த்தையை தட்டச்சு செய்துகொள்ளவும். இப்போது கீபோர்டில் F9 அழுத்தவும் வரும் விண்டோவில் ஸ்டைல் என்பதனை தேர்வு செய்யவும். உங்களுக்கு ஸ்டைல்கள் நிறைய தோன்றும். இப்போது வலதுபக்க மூலையில் உள்ள சிறிய அம்புகுறியை கிளிக் செய்யவும்.தோன்றும் பாப்அப்மெனுவில் Load Style கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் கணிணியில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ஸ்டைல்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்யுங்கள்.இப்போது மீண்டும் வார்த்தையை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான ஸ்டைலை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான ....நொடியில் ஸ்டைலுக்கு ஏற்ப உங்கள் எழுத்துக்ள் மாறிவிடும்.சில ஸ்டைல்லான பெயர்கள் கீழே-








நீங்களும் பெயர்களை தட்டச்சு செய்து விதவிதமாக ஸ்லைடல் செய்துகொள்ளுங்கள. திருமண டிசைன் செய்யும் ஸ்டுடியோ நண்பர்களுக்கு இது பெருமளவில் உதவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

சாதாரண எழுத்தையே ஸ்டைல் எழுத்தாக எழுதினால் பார்க்க மிக அழகாக இருக்கும். போட்டோஷாப்பில் ஸ்டைல் எழுத்தின் மூலம் விதவிதமான டிசைன்கள் கொண்டுவரலாம். 33 ஸ்டைல் எழுத்துக்களை இங்கு இணைத்துள்ளேன். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்த பின் போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள்.தேவையான எழுத்தினை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். பின்னர் தேவையான ஸ்டைலை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்டவாறு உங்கள் எழுத்துக்கள் மாறிவிடும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?