கணிணித்துறையின் கற்பனை களஞ்சியம் !
உலகில் உள்ள எந்தவொரு மென்பொருள் சாதனையாளர்கள் ஆகட்டும், ஏன் எந்தவொரு துறையின் சாதனையாளர்கள் ஆகட்டும் அவர்களது வெற்றியின் காரணம் என்னவென்று நீங்கள் யோசித்து பார்த்தால் உங்களக்கு கிடைக்கும் பதில் அவர்களது கடின உழைப்பு, விடா முயற்சி என்று பல காரணங்கள் சொல்லலாம், ஆனால் அதை விட அவர்களது வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் மனதில் விதைத்த அந்த முதல் துளி யோசனை / கற்பனை தான். அவர்களிடம் எந்தவொரு கற்பனையும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது கடின உழைப்பும், விடா முயற்சியும் அவர்களுக்கு வெற்றி தந்திருக்க வாய்ப்பு சிறிதளவும் இல்லை. இதை நன்கு உணர்ந்த பல திறமைசாலிகள் தங்களது கற்பனைக்கு உருவம் கொடுத்து, அதற்க்கு உயிர் கொடுத்து தங்களது வாழ்கையில் நல்லதொரு நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்கின்றனர். சரி, என்னிடம் யோசனைகள் அவ்வளவு இல்லையே என்று கவலை படுகிறர்களா? கவலை வேண்டாம், இதோ யோசனைகளின் களஞ்சியமாக விளங்குகிறது TED.
இந்த தளத்தில் பல துறையை சேர்ந்த வல்லுனர்கள் தங்களது கற்பனையை செயலாக மாற்றிய விதத்தை பற்றி பேசுகிறார்கள். மிகவும் ரசிக்கும் படியான இணையத்தளம்.
Comments