Posts

Showing posts from July, 2011

கூகுள் மெனுபாரின் நிறத்தை அழகாக மாற்றலாம்

Image
கூகுல் தளத்திற்கு சென்றால் கூகுளின் மெனுபார் இருக்கும். அந்த மெனுபாரின் நிறம் இளம் கருப்பு நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு சற்று மங்கலாக இருப்பதால் சில பேருக்கு இந்த நிறம் பிடிப்பதில்லை. அப்படி நினைப்பவர்கள் இனி கவலை பட தேவையில்லை நமக்கு பிடித்த மூன்று வண்ணங்களில் நாம் சுலபமாக அந்த மெனுபார் கலரை மாற்றி கொள்ளலாம். குரோம் நீட்சியின் உதவியுடன் இந்த மெனுபார் கலரை சுலபமாக மாற்றி கொள்ளலாம்.  இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவியை உபயோகிக்க வேண்டும். கீழே உள்ள நிறங்கள் மாற்ற பட்ட மெனுபாரின்  அழகை காணுங்கள்  பிங்க் நிறத்தில் மாற்ற இங்கு க்ளிக் செய்யவும்  நீல நிறத்தில் மாற்ற இங்கு க்ளிக் செய்யவும்  பச்சை நிறத்தில் மாற்ற இங்கு க்ளிக் செய்யவும்  இதில் உங்களுக்கு தேவையான நிறத்தின் மீது க்ளிக் செய்தால் நீட்சி டவுன்லோட் ஆகும். அடுத்து சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Install பட்டனை அழுத்தவும் அவ்வளவு தான் அடுத்த வினாடியே உங்கள் கூகுள் மெனுபாரின் நிறம் மாறிவிடும். கூகுள், ஜிமெயில்,கூகுள் பிளஸ் இப்படி எந்த கூகுள் தளத்திற்கு சென்றாலும் இனி அதன...

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்

Image
 இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக  இணையத்தை தேடவில்லை  என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள். 1) Movie Lanka இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.  2) Tamil Flix இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது.  3) Padangal  நீங்கள் இணையத்...

WINDOWS 7 : முழு ஆற்றலையும் பயன்படுத்த !

Image
    இத்தகவல்  WINDOWS 7 OPERATING SYSTEM பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் .       எல்லா கணினிகளிலுமே GRAPHICS சம்மந்தமான PROGRAMகளை இயக்கம்போது கணினி சிரமப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு PHOTOSHOP,AFTER EFFECTS போன்றவற்றை குறிப்பிடலாம் .        அது போன்ற சிரமமான நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க WINDOWS 7 ல் ஒரு  வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது .         இந்த வசதியை பயன்படுத்த CONTROL PANEL சென்று POWER OPTIONS என்பதை கிளிக் செய்யவேண்டும் .இப்போது திறக்கும் WINDOW வில் SHOW ADDITIONAL PLANS ல் உள்ள அம்பு குறியில் கிளிக் செய்யவேண்டும் .        இப்போது HIGH PERFORMANCE என்பதை தேவு செய்து விட்டு வெளியேறவும் .இனி நீங்கள் கடினமான PROGRAM களை இயக்கும்போது முன்பை விட கணினி வேகமாக செயல்படுவதை உணரலாம் .        இதற்காக உங்கள் கணினி வழக்கத்தை விட சற்று அதிகமாக மின்சாரத்தை ச...

கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க

Image
நாம் நம்முடைய பதிவில் சில விஷயங்களை வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது சில விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும் அந்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம் பதிவில் இணைப்போம். பொதுவாக நாம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Ms Paint, picasa போன்ற மென்பொருட்களை பயன் படுத்துகிறோம். ஆனால் இதில் சில அடிப்படை வசதிகளை மட்டுமே செய்ய முடியும். ஆகவே இதற்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து வசதிகளையும் நாம் செய்ய முடியும். இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்கும் PicPick என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.  இதில் உள்ள அனைத்து வசதிகளையும் சொல்ல வேண்டுமானால் இந்த பதிவு போதாது. ஆகையால் சில உங்கள் பார்வைக்கு. நினைத்த பகுதியை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி. நீங்கள் எடுக்கும் ஸ்க்ரீன்ஷாட் நேரடியாக Ms office மென்பொருட்களில் கொண்டு வரும் சூப்பர் வசதி.  எடுக்கும் ஸ்க்ரீன் ஷாட்களை நேரடியாக இணையத்தில் அப்லோட் செய்து அதன் வெப் URL காணும் வசதி. ஸ்க்ரீன்ஷாட்டை நேரடியாக சமூக தளங்களான ட்விட்டர்,பேஸ்புக் தளத்திற்கு தரவேற்றும்...

பில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது

Image
பில் கேட்ஸ் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது பெர்சனல் தகவல்களை வெளியிட்டுள்ளார் .அதில் குறிப்பிடத்தக்க ஐந்து தகவல்கள் . ரகசியம் 1: அவருடைய மூன்று குழந்தைகள் தலா 15,12,9 வயதுடையவர்கள் .அடிக்கடி அவரை பார்த்து பில்லியனர் என்ற Travie McCoy ன் பாடலை பாடி கேலி செய்கிறார்களாம் . அடிஷனல் ரகசியம்  : இதற்க்கு பதிலடியாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்ற பாடலை பாட பயிற்சி செய்து வருவதாக ஒரு தகவல் உள்ளது ரகசியம் 2 : இது வரை பல்வேறு திட்டங்களுக்காக 12 ,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார் அடிஷனல் ரகசியம்  : அடுத்த எலெக்ஷன்ல செலவழிக்க நன்கொடை குடுத்தா ஆட்சிக்கு  வந்ததும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் ,கலியுக கர்ணன் பட்டமும்  கொடுத்து  கவுரவிக்க விருப்பதாக தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவரின் வாரிசு தெரிவித்துள்ளார் . ரகசியம் 3 : ஒரே ஒரு twitter  account  உள்ளது. இருக்கின்ற ஒரே ஒரு Facebook  account  ல் நண்பர் வேண்டுதல்கள் எல்லை மீறி போய்விட்டதால் சரியாக வேலை செய்வதில்லை அடிஷனல் ரகச...

அட்டகாசமான பத்து தமிழ் வலைத்தளங்கள்

Image
தமிழ் மொழியில் பயனுள்ளதாக விளங்கும் பத்து தமிழ் வலைத்தளங்களை  அட்டகாசமான பத்து தமிழ் வலைத்தளங்கள் என்ற பதிவில் பகிர்ந்திருகிறேன்ன் . 1 . குழந்தைகளுக்காக   இது தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ் இணைய பல்கலை கழகத்தின் ஒரு பிரிவு .குழந்தைகள் தமிழை மிக எளிதாக கற்க வகைசெய்கிறது. பாடல்கள்,கதைகள் ஏராளம் . தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .   2 .தமிழ் மின்னூல்கள் இத்தளத்தில் பயனுள்ள பல தமிழ் புத்தகங்கள் மின்னூல் வடிவில் கிடைக்கின்றன .மேலும் பல விஷயங்கள் உள்ளன . இத்தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .     3 .தமிழ் செய்திகள் இதில் அனைத்து தமிழ் நாளிதழ்கள் ,செய்தி தளங்கள் ,வார பத்திரிகைகளுக்கான  இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . அனைத்து தமிழ் செய்திகளும் ஒரே இடத்தில் படிக்க இங்கு கிளிக் செய்தால் போதும் . 4 .தமிழ் சமையல் பெண்களுக்கு இது மிகவும் பயன் தரக்கூடிய தளம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .அத்தனை வகையான சமையல் குறிப்புகளும் மிகத்தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளன .சில ஆண்களுக்கும் பயன்படும் . தளத்திற்கு செல்ல இங்கே ...

பைலின் எக்ஸ்ட்டேன்சின்ஸ் (துணைப் பெயர்) காட்டப்பட

Image
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. எனவே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்ப்போம். பைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும். பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.

ஒரே தளத்தில் கீழ் அனைத்து தளங்களும்

Image
புதிதாக இண்டர்நெட்டை பயன் படுத்துபவர்கள்களுக்கு, பல இணைய தளங்களின் முகவரி தெரியாது . இணைய தளத்தின் முகவரியை நினைவில் வைக்க இயலாது. அவர்களால் ஒருசில இணைய தளத்தின் முகவரியை மட்டுமே நினைவில் வைக்க முடியும். உதாரனத்திற்க்கு google,யாஹூ போன்ற தளங்களை மட்டுமே நினைவில் வைக்க இயலும் . எந்ததளம் சிறந்த தளம் எனவும் தெரியாது அவர்களுக்கு என்றே உள்ளதளம் தான் Allmyfavesதளம்ஆகும் . இந்த தளத்தில் Blogs Business Education Entertainment Games Kids Shoping Travel Weekly Faves என வகைபடுத்தப்பட்டுள்ளது . இந்த தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

WEBSITE களை PDF கோப்பாக பெற

Image
உங்களுக்கு பிடித்த WEBSITE களை PDF கோப்பாக(FILE) பெற இங்கு சொடுக்கவும்.

விண்டோஸ் 7ல் பூட்டிங் திரையை மாற்றம் செய்ய

Image
விண்டோஸ்7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பூட் ஆகும் திரையை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கிறன அதில் ஒன்றுதான் இந்த Boot Updater மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் பூட்டிங் திரையை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மேலும் கணினி தொடங்கும் திரையையும், கணினிமூடும் திரையையும் வேறுபடுத்தி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன், பூட் ஆகும் திரையின் பின்புறத்தின் கலர், எழுத்து மற்றும் எழுத்தினுடைய அளவு போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ள  முடியும். மென்பொருளின் உதவியுடன் பின்புறத்தில் படத்தினையும் கொண்டுவர முடியும். வேண்டுமெனில் அனிமேஷன் பைலையும் திரையில் கொண்டுவர முடியும். படத்தை வேண்டிய இடத்தில் வைத்துக்கொள்ளவும் இந்த மென்பொருளில் வசதி உள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த மென்பொருளின் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் வரிசையில் Run as administrator எ...

விண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்

Image
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய வெளியிடான இயங்குதளம் விண்டோஸ் 7 ஆகும். இதனை திறம்பட பயன்படுத்த சில Shortcut கள் உள்ளன. அவற்றில் சில Shorcut கள். Copy item: Ctrl+C Cut : Ctrl+X Paste : Ctrl+V Undo an action : Ctrl+Z Select everything : Ctrl+A Print : Ctrl+P Switch between open windows - ALT + Tab Show desktop- Windows Key + D Open Task Manager – Ctrl + Shift + Escape Lock Windows workstation - Windows key + L Open a new instance of a program - Shift + Click a taskbar icon Presentation display mode – Windows key + P Zoom in and out – Windows key + +/ Windows key + - Minimize the Window – Windows key + Down Arrow Maximize the Window – Windows key + Up Arrow Windows 7 Snap mode- Windows key + Arrow Rename a Folder - F2