Posts

எக்ஸ்சல் பார்முலா ஒரு பார்வை..

அடிக்கோடு : எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது.  இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cell s என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும்.  இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும். COMBIN பார்முலா : எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க ...

கணணியை சிதைக்கும் எபோலா வைரஸ்

Image
உலக அளவில், உயிர்க் கொல்லி நோயைப் பரப்பும் எபோலா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும், மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், கம்ப்யூட்டரை இது பாதித்து வருகிறது என்ற செய்தி வியப்பைத் தந்து கொண்டிருக்கிறது.  உண்மை என்னவென்றால், எபோலா வைரஸ் குறித்து பல போலியான இமெயில்கள், உலகெங்கும் வலம் வருகின்றன. ”எபோலா பற்றி, உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் தந்துள்ளது. இதை அவசியம் படியுங்கள்.  மற்றவர்களுக்கும் பரப்புங்கள்” என்ற எச்சரிக்கை மெயில் ஒன்று வருகிறது. அறிக்கை குறித்துப் படிக்க லிங்க் ஒன்றும் தரப்படுகிறது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், உடன் மால்வேர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, கம்ப்யூட்டரின் இயக்க கட்டுப்பாட்டினை, அஞ்சல் வழியாக இன்னொருவருக்கு அனுப்புகிறது.  உங்கள் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், அதற்கான பாஸ்வேர்ட் எண், கிரெடிட் கார்டு எண் என அனைத்து தனி நபர் தகவல்களும் செல்கின்றன. இதனால், அனைத்து வழிகளிலும் இழப்பு ஏற்படுகிறது.  எனவே, இத்தகைய மெயில் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தாலோ, அல்லது உங்கள் ஸ்மார்ட் போன...

சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு இலவச ஹியர் மேப்ஸ்

Image
சென்ற ஆகஸ்ட் மாதம், ஹியர் (HERE) நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் தான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.  அதன் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்கள், இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹியர் மேப்ஸ் அப்ளிகேஷன் ஒன்றின் சோதனை பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது.  எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் வகையில், போக்குவரத்திற்கான வழிகாட்டுதல்களை இந்த மேப் காட்டுகிறது.  விண்டோஸ் போனில் கிடைக்கும், போன் இயங்கும் இடம் சார்ந்த அனைத்து வழி காட்டுதல்களும் இதில் கிடைக்கின்றன.  இதன் சிறப்பு அம்சங்கள்: இணைய இணைப்பின்றி, கார் ஓட்டும் போதும், நடந்து செல்லும் போதும், குரல் மூலம் வழி காட்டுதல், நூறு நாடுகளில் வழி காட்டும் வகையிலான வரைபடங்களை தரவிறக்கம் செய்து, அமைத்துக் கொள்ளும் வசதி மற்றும் 46 நாடுகளில், 766 நகரங்களில், பொதுத்துறை வாகனங்கள் செல்லும் வழி மற்றும் திசை காட்டும் வரைபடம் ஆகியவை ஆகும்.  ஆண்ட்ராய்ட் 4.1 மற்றும் அதன் பின்னர் வெளியான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்ட சாம்சங் மொபைல் ஸ்மார்ட் போன்கள...

விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு

Image
ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன.  இருப்பினும், ஸ்டார்ட் மெனுவில் தற்போது தரப்பட்டுள்ள வடிவமைப்பு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தைய ஸ்டார்ட் மெனுவின் வசதிகளைக் காட்டிலும் கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் வடிவமைப்பும் மிக எளிதாக அதனை இயக்குவதற்கு வழிகள் தருவதாக அமைந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம். ஸ்டார்ட் மெனு தற்போது லைவ் டைல்ஸ் என்று அழைக்கப்படும், எப்போதும் இயக்கத்தில் உள்ள அப்ளிகேஷன்களின் நிலையைக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.  இதன் வலது பக்க பிரிவில், நீங்கள் விரும்பும், அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை பின் செய்து வைக்கலாம். விண்டோஸ் போன் மெனுவில், நாம் அடிக்கடி அழைப்பவரின் எண்ணை பின் செய்வது போல, இங்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷனை பின் செய்து அமைக்கலாம்.  லைவ் டைல்ஸ் என்பவை உயிர்த்துடிப்புள்ளவை. அதாவது, அதன் இயக்கம் அந்த டைலில் காட்டப்பட்ட...