Posts

பத்து ஆண்டுகளைக் கடந்த ஜிமெயில்..

Image
ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது.  அதனால் தான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1 அன்று, ஒரு ஜிபி சர்வர் இடத்துடன், இலவச மின் அஞ்சல் சேவையினை அனைவருக்கும் வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்த போது, எல்லாரும் அதனை முட்டாள் தினச் செய்தியாக எடுத்துக் கொண்டனர்.  அப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து வந்த இடத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிகமான இடம் என்பதாலேயே இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்தது. 2004 ஆம் ஆண்டில், ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இடம் என்பது, மிகப் பெரிய நம்பமுடியாத செய்தியாகும்.  ஆன்லைனில் 2 எம்.பி. ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைப்பதே பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டு வந்தது. எனவே தான் கூகுள் அறிவித்த 1 கிகா பைட் இடம் என்பது முற்றிலும் கற்பனையான ஒன்று என அனைவரும் எண்ணினார்கள்.  ஆனால், அது முற்றிலும் உண்மையான ஓர் அறிவிப்பு எனத் தெரிய வந்தபோது, இணைய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்பட்டது. அதுவே தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் சாம்ராஜ்ஜியத்தை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் நி...

ஸ்டோரேஜ் டிவைசின் மெம்மரி யூனிட் ரேஞ்..

பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்னவென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட் (KB), கிகா பைட் (GB), டெரா பைட் (TB) அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம். அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்து பல மாதங்கள் ஆகின்றன. எனவே நான் அறிந்த அவற்றை இங்கு காணலாம். ௦ அல்லது 1 = 1 பிட் (b), 8 பிட்ஸ் (b)  = 1 பைட் (B) , 1,024 பைட்ஸ் (B) = 1 (KB) கிலோ பைட், 1,024 கிலோ பைட்ஸ் (KB) = 1 (MB) மெகா பைட், 1,024 மெகா பைட்ஸ் (MB) = 1 (GB) கிகா பைட், 1, 024 கிகா பைட்ஸ் (GB) = 1 (TB) டெரா பைட், 1,024 டெரா பைட்ஸ் (TB) = 1 (PB) பெட்டா பைட், 1,024 பெட்டா பைட்ஸ் (PB) = 1 (EB) எக்ஸா பைட், 1,024 எக்ஸா பைட்ஸ் (EB) = 1 (ZB) ஸெட்டா பைட், 1,024 ஸெட்டா பைட்ஸ் (ZB) = 1 (YB) யோட்டா பைட். கம்ப்யூட்டர் கணக்கில...

வேர்ட்டில் ஆல்ட் கீயின் முக்கியத்துவம்

Image
வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்  Alt O, B: தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம். Alt O, E: ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத் தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன. Alt O, C: காலம், செக்ஷன் என்றழைக்கப்படுகிற பிரிவுகளை ஏற்படுத்த இந்த கீகளை முதலில் அழுத்தலாம். column format என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.   Alt O, D: ஆவணத்தில் பத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் எழுத்தைப் பெரிதாக, பெரிய எழுத்தாக மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம். ஆல்ட் ஓ மற்றும் டி அழுத்தியவுடன் ட்ராப் கேப் என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் எழுத்து எப்படி அமைய வேண்டும் என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நாம் தேர்ந்தெடுக் கப்படும் வகையில் பத்தியின் முதல் எழுத்து மாற்றப்படும். நன்றி நிலவு

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட்போன்

Image
வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட தன் சாம்சங் கேலக்ஸி எஸ்5 புதிய மொபைல் போனைச் சென்ற வாரம் டில்லியில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முன்னதாக, இந்தபோன், பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் உலகக் கருத்தரங்கில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அப்போது, சாம்சங் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த சில அம்சங்கள் இல்லாததால், பலர் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், சாம்சங் எப்போதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை ஒட்டியே தன் மொபைல் போன்களை வடிவமைக்கும் என்பதால், இதிலும் பல புதிய சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளிவிலான டிஸ்பிளே, மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் பேட்டரியினை இங்கு குறிப்பிடலாம்.  இந்தியாவில், டில்லியில் இது அறிமுகப்படுத்தப்பட்ட போது, இறுதி விலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ரூ.51,000 முதல் ரூ.53,000 வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சாம்சங் காலக்ஸி எஸ் 4 அறிமுகமானபோது அதன் விலை ரூ.41,500. இப்போது அதன் விலை ரூ.29,500.  இருப்பினும், சாம்சங் கேலக்ஸி எஸ் 5, சாம்சங் போன்களிலேயே அதிக விலை உயர்ந்ததாக, குறிப்பாக ரூ.50,000க்கும் மேலானதாக இருக்கும்...