Posts

அவுட்டர்நெட் தரும் இலவச இண்டர்நெட்

Image
நாம் என்றாவது யோசித்திருப்போமா? இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று? இல்லை. வேடிக்கைக்குக் கூட இது போல ஒருவர் சொல்லிக் கேட்டதில்லை.  ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.  இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக இருக்கும்.  எந்த இடம் என்றில்லாமல், உலகில் வாழும் அனைவருக்கும், எந்தவித தடையும் இன்றி, வடிகட்டல் இன்றி, அனைத்து இணைய டேட்டாவும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். அதுவும் இலவசமாகவே அனைவருக்கும் இந்த இணைப்பு கிடைக்கும்.  இன்டர்நெட் வேகமாக வளர்ந்து, நம் வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக மாறிவிட்டது. எனவே, மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்பினர், உணவு, உடை, வாழ இடம் ஆகியவற்றை அடுத்து, இன்டர்நெட் இணைப்பினையும் மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதுக...

தொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்

Image
வாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது. இந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியிடம், உலக அளவில், 50 கோடி போன் எண்கள் உள்ளன. அத்துடன் இவை, இணையத்தில் எந்த இடத்தில் உள்ளன என்ற தகவலையும் வாட்ஸ் அப் வைத்துள்ளது. இந்த அளவிற்கு வழக்கமான தொலைபேசிகள் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தாலும், வாட்ஸ் அப் இந்த தொலைபேசி பயன்பாட்டிற்கு எந்த நிறுவுதல் கட்டணமோ, செயல்படுத்துவதற்கான கட்டணமோ வாங்குவதில்லை என்பது இதன் சிறப்பு. இதனை மைக்ரோசாப்ட், தான் வாங்கிய ஸ்கைப் வசதியுடன் சாதித்திருக்க முடியும். கூகுள் நிறுவனமும் தன் கூகுள் வாய்ஸ் மூலம் இதனை மேற்கொண்டிருக்க முடியும். ஏன், பேஸ்புக் இதனை அடைய முன்பே அதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் இவற்றால் இயலவில்லை. என்ன காரணம்? இவ்வாறு அதிக எண்ணிக்கையில் த...

ஆண்ட்ராய்ட் - குரோம் இயக்க முறைமைகள்

Image
கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் இரண்டு வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தான் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம். ஆனால், இவை இரண்டும் வெவ்வேறான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை இங்கு பார்க்கலாம். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன் இயக்க சாப்ட்வேர் தொகுப்பாகும். இது மொபைல் போன் இயங்குவதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம், மிடில்வேர் எனப்படும் அப்ளிகேஷனைத் தொடர்பு படுத்தும் சாப்ட்வேர் மற்றும் முக்கிய, அத்தியாவசியத் தேவைகளுக்கான அப்ளிகேஷன்கள் அடங்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள், இணையத்தில் கிடைக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயர்ந்து கொண்டே போகிறது. தொடக்கத்தில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, 2003ல் தொடங்கப்பட்ட Android OS Inc என்ற நிறுவனம் உருவாக்கியது. ஆனால், 2005 ஆம் ஆண்டில், கூகுள் இதனை வாங்கியது. தொடர்ந்து அதன் பல்வேறு பதிப்புகளை உணவுப் பொருட்களின் பெயர்களோடு, ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் வெளியிட்டது. தற்போது...

மோட்டோ எக்ஸ் மொபைல்கள்

Image
 அடுத்த ‘சில வாரங்களில்’ மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் முழு குறிப்புகள்: அகலம்: 65.3 உயரம் 129.3mm கர்வ்: 5.6 10.4mm டிஸ்ப்ளே: 4.7 இன்ச் ‘AMOLED (RGB) / HD 720p ப்ராசசர்: 1.7 GHz டியுல் கோர் ப்ராசசர் எடை: 130 கிராம் பேட்டரி: 2200 mAh. பின்புற கேமரா: 10 மெகாபிக்சல் CLEAR பிக்சல் (RGBC) / எல்இடி பிளாஷ் / 1080p வீடியோ (30fps) முன் கேமரா: 2 மெகாபிக்சல் 1080p HD வீடியோ ஆப்ரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 4.2.2 ஆர்கிடெக்சர்: மோட்டோரோலா X8 மொபைல் கம்ப்யூட்டிங் சிஸ்டம் ராம்: 2GB சேமிப்பு: 16ஜிபி மற்றும் 32 ஜிபி ப்ளூடூத்: 4.0 LE + EDR WiFi 802.11a/g/b/n/ac (டூயல் பேண்ட் திறன்), மொபைல் ஹாட்ஸ்பாட் ஜிஎஸ்எம் / ஜிபிஆர்எஸ் / எட்ஜ்; யூஎம்டீஎஸ் / எச்எஸ்பிஏ வரை 42 நொடி; CDMA / EVDO Rev. A (சிடிஎம்ஏ மாடல் மட்டும்); 4 ஜி – LTE