Posts

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

Image
எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம். கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்...

எச்சரிக்கை: புதிய பேஸ்புக் வைரஸ்

Image
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய பைல் ஒன்று உள்ளது. இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது. தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் பைலாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும்.

இலவச பி.டி.எப். (PDF) புரோகிராம்கள்

Image
அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (PDFPortable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த புரோகிராம்களை இங்கு காணலாம். பி.டி.எப். பார்மட், பல ஆண்டுகளுக்கு முன்பு, அடோப் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், பார்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப். பார்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது. டெக்ஸ்ட், இமேஜ், மல்ட்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப். பார்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பாஸ்வேர்ட் கொண்டு ஒரு பி.டி.எப். பைலை பாதுகாக்கலாம். எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலைக் காண முடியும். இந...

எவ்வாறு Virtual PC யை பயன்படுத்தி Virtual Machineனுள் விண்டோஸ் 7யை நிறுவுதல்.

Image
இன்றைய பதிவானது முந்தய பதிவின் தொடர்ச்சியாக இடப்படுகின்றது. இந்த செய்முறையை செவ்வனே செய்வதற்கு நீங்கள் முதல் இங்கு சென்று Virtual PC யை பயன்படுத்தி எவ்வாறு விண்டோஸ் 7 யில் Virtual Machine உருவாக்குவது என்பதை அறிந்துவிட்டு வாருங்கள். இப்படி செய்வதனால் நீங்கள் இன்னும் இலகுவாக இந்த பதிவை விளங்கிக்கொள்வீர்கள். இந்த செய்முறையை ஆரம்பிப்பதற்கு முதலில் உங்களது Virtual Machines கோப்புறையை (Folder) திறந்துகொள்ளுங்கள். அங்கே நீங்கள் உருவாக்கிய புதிய virtual machine காண்பீர்கள். அதன் மேல் கேசறை வைத்து right click கை அழுத்தி Settings என்பதை தெரிவு செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய Windows 7 installation DVD யை கணணியில் ஏற்றுங்கள் (Load). பின்பு கிழே படத்தில் காட்டப்பட்டவாறு DVD drive யையும் Access a physical drive யையும் தெரிவு செய்யுங்கள். அல்லது உங்களுடைய கணணியில் ISO கோப்பு (File) கொண்ட installation DVD இருக்கும் என்றால் அந்த கோப்பை நீங்கள் பயன்படுத்தலாம். இது இன்னும் இலகுவான வழி. அடுத்த கட்டமாக ...