Posts

Showing posts from December, 2014

கையில் தொடுதிரை புதிய முயற்சி..

Image
ஸ்மார்ட் போனில் உள்ள தொடுதிரை வசதி எல்லாம் ஒன்றுமே இல்லை. பிரான்சைச் சேர்ந்த சிக்ரெட் எனும் நிறுவனம் உங்கள் கைகளேயே தொடுதிரையாக மாற்றுவதற்கான கருத்தாக்கத்தை முன் வைத்துப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிறுவனம் இதற்காகப் புதிய ஹைடெக் பிரேஸ்லெட்டை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  “உங்கள் சருமத்தை புதிய டேப்லெட்டாக மாற்றுங்கள்” எனும் கோஷத்தை முன்வைத்துள்ள இந்நிறுவனம் இந்த நவீன் பிரேஸ்லெட் செயல்படும் விதத்தை விவரிக்கும் வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக 40 லட்சம் முறைக்கு மேல் பார்த்து வியக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டு, சிப், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், அக்ஸலோமீட்டர் ,வை-பை மற்றும் புளுடூத் கொண்டதாக இந்தச் சாதனம் உருவாக்கப்பட உள்ளது. இதற்குத் துணையாக ஒரு செயலியும் உண்டாம். மெயில் படிப்பது, போன் பேசுவது,நோட்டிபிகேஷன் பெறுவது என எல்லாமே இந்தக் கை தொடு திரையில் சாத்தியம் என நிறுவனம் கூறுகிறது. இந்த பிரேஸ்லெட் மற்றும் அதற்குத் துணையான செயலியை உருவாக்க இணையம் மூலம் நிறுவனம் நிதி கோரியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் முன்னோட்ட வடிவை ...

புத்தாண்டில் மைக்ரோசாப்ட்டின் திட்டம்..

Image
வரும் 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சவால் நிறைந்ததாக இருக்கும். விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்பட்ட நற்பெயர் இழப்பினை, விண்டோஸ் 10 மூலம் சரி செய்திட வேண்டிய நிர்ப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் உள்ளது. ஆனால், நிச்சயம் மைக்ரோசாப்ட் இந்த சவாலைச் சந்தித்து வெற்றிக் கொடி நாட்டும். சென்ற 2009 ஆம் ஆண்டில், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இதே போல, மைக்ரோசாப்ட் இழந்த பெயரை ஈட்டுத் தந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் வேறு விற்பனைச் சந்தையில் இருந்து வந்தாலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் முக்கிய இடம் கொண்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், சர்வர்களிலும் இயங்கும் விண்டோஸ் சிஸ்டம், வருமானத்தை அள்ளித் தந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும், மைக்ரோசாப்ட் இதனைத் தேய்ந்த நிலைக்குச் செல்லவிடாது.  வரும் ஆண்டில், வர இருக்கும் விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல வகைக் கட்டமைப்புகளில் செயல்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்கும். போன், டேப்ளட் பி.சி., பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் எக்ஸ்பாக்ஸ் உட்பட அனைத்திலும் இணைந்து...

வேர்டில் ஸ்கிரீன் டிப் செட்டிங்ஸ்

Image
வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள்  மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.  1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.) 2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். 3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற ப...

தகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை?

அண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (Broadband Tech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.  தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.  இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் ஆலோசகர் ஏ.கே. பார்கவா உரையாற்றுகையில், “புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதிகமான தகவல் பதிவு மற்றும் பரிமாற்றம் காரணமாக, டேட்டா பரிமாற்ற கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.  மத்திய அரசு 3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை வரிசைக்கான ஏலத்தினை நடத்துவதில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், டேட்டா பரிமாற்ற கட்டணத்தைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறது.  அலைக்கற்றை வரிசை அதிகமாகவே கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதால், டேட்டா பரிமாற்ற சேவையில், பைபர் ஆப்டிகல் துணையுடன் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். இதனால், பொதுத்துறை மற்றும் தனியார...

தடங்கலுக்கு வருந்துகிறேன்..! :-/

அன்புடைய நண்பர்களுக்கு.,     கடந்த இரு மாதங்களாக நான் மிகுந்த அலுவல் பணி இடுக்குகளில் சிக்கிகொண்டிருந்ததால்,  நமது இந்த வலைப்பூவை மேம்படுத்த புது இடுகைகளை இட முடியவில்லை.          அதனால் மிகுந்த வருத்தமடைகிறேன், இன்று முதல் நமது வலைபூவை வழக்கம்போல மேம்படுத்தப்படும் நண்பர்களே..!            தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறேன்..!