பேஸ்புக் ஒரு சமூக நோய்



பேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்திய் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், இதன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் இதனை விட்டு விலகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது பேஸ்புக் சமூக இணைய தளத்திலேயே குடியிருக்கும் பலரை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.

எப்போதும் ஸ்டேட்டஸ் போட்டு, தங்கள் போட்டோக்களை அப்லோட் செய்து, நண்பர்களின் சொத்தைக் கருத்துக்களுக்கெல்லாம் லைக் போட்டு, தான் போட்ட ஸ்டேட்டஸுக்கு எத்தனை லைக் மற்றும் ஷேரிங் வந்துள்ளது என்று அடிக்கடி பேஸ்புக் வீட்டில் சுழன்று வருவோருக்கு இந்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியத்தைத் தந்துள்ளன.

சிலரோ, இது என்ன முட்டாள்தனமான முடிவாக உள்ளது. இதற்கு அடிப்படையே இல்லை; சிலர் விலகினாலும், பலர் இதில் ஐக்கியமாவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வு என்னதான் சொல்கிறது என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய் போல நம்மைச் சூழ்ந்துள்ளதாக, புள்ளிவிபரங்களுடன் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ப்ளு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, கூகுள் ஒரு சேவையைத் தொடங்கியது.

இதனால் பாதித்தவர்களும், பாதித்தால் என்ன செய்வது என்று பயந்தவர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எண்ணியவர்களும், தகவல்களைத் தெரிந்துதான் வைப் போமே என்று நினைத்தவர்களும், மொத்தம் மொத்தமாக இந்த சேவை கேட்டுத் தங்கள் பெயர்களைப் பதிந்தனர்.

தங்கள் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சேவை அந்த நோயின் ஒரு பகுதியாகவே மாறியது. இந்த சேவை தளம் மூலமாகவே, இந்நோய் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரின்ஸ்டன் பல்கலைக் கழகமும் இதே போன்ற வழிகளில், பேஸ்புக் தளத்தின் பிரபலத் தன்மை குறைந்து கொண்டு வருவது குறித்த தன் ஆய்வினை மேற்கொண்டது.

எப்படி ஒரு நோய் வேகமாகப் பரவிப் பின் தொய்வடைகிறதோ, அதே போல பேஸ்புக்கின் நிலையும் இருக்கும் என்று பல எடுத்துக் காட்டுகளுடன் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. டிசம்பர் 2012ல் தான், பேஸ்புக் இணைய தளம், மிக அதிகமான அளவில், புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது.

தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளே இருக்கும். 2015 முதல் 2017 ஆம் ஆண்டு காலத்தில், வாடிக்கையாளர்கள் இதனை விட்டு விலகத் தொடங்குவார்கள் என்று உறுதியாக இந்த ஆய்வு முடிவினை அறிவித்துள்ளது. 
 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?