இரகசியமாக கடலிற்குள் மிதற்கும் டேட்டா செண்டர்களை உருவாக்கும் கூகிள் நிறுவனம்?


உலகின் மிகப்பெரிய டேட்டா செண்டர்களை தனக்கென உருவாக்கி வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.

இதுவரை நிலப்பரப்பின் மீதே அவை இரகசிய இடங்களில் நிறுவப்பட்டு சைபர் சட்டங்களில் குறைந்தளவு கெடுபிடிகளை கொண்ட நாடுகளில் உருவாக்கி வந்தது கூகிள்.

ஆனால் தற்போது உலகின் எந்தவொரு அரசினாலும் இலகுவில் நெருங்கமுடியாதபடி கடலில் மிதற்கும் டேட்டா செண்டர்களை உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப உலகமே பரபரக்கின்றது.

உலகின் மிகப்பெரியளவில் பாவனையளர்களது விபரங்களை கூகிள் நிறுவனமே டேட்டா செண்டர்களில் சேமித்து வைத்துள்ளது.

தற்போது கடலில் நிறுவிவரும் டேட்டா சென்டர்கள் தொடர்பில் பிரபல தொழில்நுட்ப தளமான சிநெட் ஆய்வு செய்து படங்கள் வீடியோவுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது.

தரையில் நிறுவுவதை விட்டு ஏன் கடலிற்கு செல்ல வேண்டும் என்ற காரணங்களில் கடல் நீரின் மூலம் டேட்டா செண்டர்களை குளிர்மையாக வைத்திருக்க முடிவதே என்பது சாதகமாக இருந்தாலும் உண்மையில் இதற்கான வேறு காரணங்களும் இருக்கக்கூடும் என்று சந்தேகம் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

San Francisco Bay மற்றும் Maine இலிள்ள Portland துறைமுகம் ஆகிய இடங்களில் சந்தேகத்திற்குரிய 3 அடுக்குமாடி கொண்ட கட்டிடங்கள் போன்றவை மிதற்கும் சாதனங்களின் மேல் வைத்து கட்டப்பட்டு வருவதாகவும் இவை கூகிளின் டேட்டா செண்டரின் வடிவமைப்புடன் ஒத்திருப்பதாகவும் சி நெட் தெரிவிக்கின்றது.


நன்றி 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?