Posts

Showing posts from February, 2014

புதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்

Image
இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும். தொழில் நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்” (ICANN(Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. முதலில் இணையதளப் பெயர்களின் துணைப் பெயராக .com என்பதுதான் பலரும் பயன்படுத்தும் பெயராக இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு வாக்கில், உருவாக்கப்பட்ட இணைய தளங்களின் எண்ணிக்கை திடீரென பன்னாட்டளவில் அதிகமானதால், புதிய வகைப் பெயர்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை "dot com” boom என அனைவரும் அழைத்தனர். பின்னர், படிப்படியாக புதிய வகைப் பெயர்கள் தரப்பட்டன. அவற்றை இணைய நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கின. அண்மையில், ஐகான் அமைப்பு ஏழு புதிய வகைப் பெயர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவை .bike, .singles, .clothing, .guru, ....

பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்

Image
அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம் . 1. ஓர் எளிய தொடக்கம்: 2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. பின்னா ளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை "Thefacebook” என இதனைத் தொடங்கிய மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின...

பேஸ்புக் ஒரு சமூக நோய்

Image
பேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்திய் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், இதன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் இதனை விட்டு விலகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. இது பேஸ்புக் சமூக இணைய தளத்திலேயே குடியிருக்கும் பலரை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது. எப்போதும் ஸ்டேட்டஸ் போட்டு, தங்கள் போட்டோக்களை அப்லோட் செய்து, நண்பர்களின் சொத்தைக் கருத்துக்களுக்கெல்லாம் லைக் போட்டு, தான் போட்ட ஸ்டேட்டஸுக்கு எத்தனை லைக் மற்றும் ஷேரிங் வந்துள்ளது என்று அடிக்கடி பேஸ்புக் வீட்டில் சுழன்று வருவோருக்கு இந்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியத்தைத் தந்துள்ளன. சிலரோ, இது என்ன முட்டாள்தனமான முடிவாக உள்ளது. இதற்கு அடிப்படையே இல்லை; சிலர் விலகினாலும், பலர் இதில் ஐக்கியமாவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வு என்னதான் சொல்கிறது என்று சற்று விரிவாகப் பார்க்கலாம். பேஸ்புக் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய் போல நம்மைச் சூழ்ந்துள்ளதாக, புள்ளிவிபரங்களுடன் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர...

கூகுள் தேடலில் அடிப்படைகள்

Image
இன்றைய தேடல் உலகில் அதி நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கி, வேறு யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது கூகுள் தேடல் சாதனங்கள். இணையம் சார்ந்து இயங்கும் எந்த நிறுவனமும், தனி நபர்களும், கூகுள் வழி மேற்கொள்ளப்படும் தேடல் முடிவுகளையே தங்கள் கணிப்பின் அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது. இதற்கான விடையை இங்கு காண்போம். முதலில் கூகுள் தோன்றிய நிலையைக் காணலாம். விக்கிப்பீடியா தளம் தரும் தகவல்களின் படி, கூகுள் சர்ச் என்னும் பிரிவு, 1997ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin). இன்றைய நிலையில், நாளொன்றுக்கு இந்த தேடல் தளம் வழியாக 300 கோடிக்கும் மேற்பட்ட தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தேடலுக்கான முடிவுகள், 60 ட்ரியல்லனுக்கு (10 லட்சத்து 10 லட்சம் - 1,000,000,000,000) மேலான இணையப் பக்கங்களைத் தேடித் தரப்படுகிறது. இவற்றைத் தேட ஒரு அட்டவணைக் குறிப்பு (index) பயன்படுத்தப்படுகிறது. இதன் அளவு 95 பீட்டா பைட்ஸ். (ஒரு பீட்டா பைட் என்பது 1000000000000000 ப...

நோக்கியா வெளியிடும் குறைந்து விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

Image
பட்ஜெட் விலையில் போன்களை வாங்கும் தன்மை இந்திய வாடிக்கையாளர்களிடம் இருப்பதனை, மொபைல் போன் நிறுவனங்கள் நன்கு அறிந்துள்ளன. நோக்கியா, கூகுள் நிறுவனத்தின் போட்டி யாளரான மைக்ரோசாப்ட் நிறுவனத் துடன் நெருங்கி இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும், ஸ்மார்ட் போன்களை குறைவான விலையில் விற்பனை செய்திடும் வகையில் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது. இதில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் சில நவீன வசதிகள் கிடைக்காது. மைக்ரோசாப்ட் மற்றும் அதன் கூட்டாளியான நோக்கியா ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் முன்னேற இயலாத நிலையில் உள்ளன.இந்த வகையில் முதல் இடங்களில் இருப்பன சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களே. இந்த விலை குறைந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்கு வதன் மூலம், இந்தப் பிரிவில் தன் பங்கினைச் சிறப்பான முறையில் பெற நோக்கியா முயற்சிக்கிறது. சென்ற ஆண்டு விற்பனையான ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 79 சதவீதப் போன்களிலும், ஐபோன்களில் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் 15% போன்களிலும் இடம் பெற்றிருந்தன. விண்டோஸ் போன் 4% மட்டுமே கொண்டிருந்தது.    நன்றி  ...

சில தகவல் தொழில்நுட்ப துளிகள்..

தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க்கினை அமெரிக்கா முதல் இடம் கொடுத்து பாராட்டியது. வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார். ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர். ஸக்கர்பெர்க், பேஸ்புக்கின் போட்டி தளமான ட்விட்டர் தளத்தில் தனக்கென ஒரு பக்கக் கணக்கு வைத்துள்ளார். இதற்கு 3 லட்சம் விசிறிகள் உள்ளனர். ஆனால், 2012 ஜனவரிக்குப் பிறகு, இதில் புதியதாக எதுவும் எழுதப்படவில்லை. 6,900 கோடி டாலர் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக உயர்வதற்கு, டாட்டா கன்சல்டன்ஸி (டி.சி.எஸ்) நிறுவனத் திற்கு 46 ஆண்டுகள் ஆனது. ரிலை யன்ஸ் 4,300 கோடி டாலர் மதிப்பினைப் பெற 43 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், பேஸ்புக், பத்தே ஆண்டுகளில் 16,100 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது. தன் பயனாளர்களில், 60 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறுதலாக ஒரு நிறுவனத்திற்குச் சென்றது என பேஸ்புக் அறிவித்தது. இது தன் சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்த தவறினால் ஏற்பட்டது என ஒப்புக் கொண்ட பேஸ்...

பேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு..

Image
தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் நனைத்தது. ஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது. இந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் பதிவு செய்து மகிழ்ந்தனர். இது என் படம். உங்களுடையது இங்கு உள்ளது என அதற்கான லிங்க் தரப்பட்டது. ஒவ்வொருவரும் பேஸ்புக்கில் லாக் இன் செய்த பின்னர் Look back என்ற முகவரியில் உள்ள பக்கத்திற்குச் சென்றால், அவர்களுக்கான வீடியோ கிளிப் கிடைக்கும். பிப்ரவரி 4, பேஸ்புக் பிறந்த நாள் அன்று இவை வெளியிடப்பட்டன. இவை ஒரு மாதத்திற்கு இந்த தளத்தில் கிடைக்கும். இதனை எடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் டைம் லைன் பக்கத்தில் பதிந்து வைத்தால், தொடர்ந்து எப்போதும் இடம் பெறும். நூறு கோடி மக்களுக்கும் மேலானவர்கள் இந்த படத்தைப் பெற்றனர் என்பது டிஜிட்டல் வரலாற்றில் ஒரு புதிய தகவலாகும். பேஸ்புக் கூட சரியாக எத்தனை வீடியோக்கள் இதுபோல உருவாக்கப்பட்டன என்...

குறைக்கப்பட்ட விலையில் ஆப்பிள் ஐபோன் 5சி 16 ஜிபி

Image
சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 4 மொபைல் போனின் 8ஜி மாடலை விலை குறைத்து வழங்குவதாக செய்தி வந்தது. ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன், ஆப்பிள் நிறுவனம், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாட்டு மக்களுக்காக, இதனை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது. தற்போது ஐபோன் 5சி மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, இணைய தளங்கள் தெரிவித்துள்ளன. இந்த போனின் அறிவிக்கப்பட்ட முதல் விலை ரூ. 41,900. தற்போது இது ரூ.36,899க்குக் கிடைக்கிறது. இது ஏறத்தாழ ரூ.5,000 விலை குறைப்பாகும். அமேஸான் இந்தியா வர்த்தக இணைய தளத்தில், ஒவ்வொரு வண்ண போனுக்கும் ஒரு விலை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட விலை நீல வண்ணப் போனுக்கானது. மஞ்சள் நிற போன் ரூ.37,149க்குக் கிடைக்கிறது. வெள்ளை வண்ணத்திலானது ரூ.39,250. ப்ளிப் கார்ட் இணைய தளத்தில், குறைந்த விலை ஐபோன் ரூ.38,100. ஸ்நாப் டீல் தளத்தில் ரூ.37,622. ஆப்பிள் ஐபோன் 5சி சிறப்பம்சங்கள்: 4 அங்குல ரெடினா டிஸ்பிளே 1136 x 640 பிக்ஸெல் திறன் ஐ.ஓ.எஸ். ஆப்...

இரகசியமாக கடலிற்குள் மிதற்கும் டேட்டா செண்டர்களை உருவாக்கும் கூகிள் நிறுவனம்?

Image
உலகின் மிகப்பெரிய டேட்டா செண்டர்களை தனக்கென உருவாக்கி வைத்துள்ளது கூகுள் நிறுவனம். இதுவரை நிலப்பரப்பின் மீதே அவை இரகசிய இடங்களில் நிறுவப்பட்டு சைபர் சட்டங்களில் குறைந்தளவு கெடுபிடிகளை கொண்ட நாடுகளில் உருவாக்கி வந்தது கூகிள். ஆனால் தற்போது உலகின் எந்தவொரு அரசினாலும் இலகுவில் நெருங்கமுடியாதபடி கடலில் மிதற்கும் டேட்டா செண்டர்களை உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப உலகமே பரபரக்கின்றது. உலகின் மிகப்பெரியளவில் பாவனையளர்களது விபரங்களை கூகிள் நிறுவனமே டேட்டா செண்டர்களில் சேமித்து வைத்துள்ளது. தற்போது கடலில் நிறுவிவரும் டேட்டா சென்டர்கள் தொடர்பில் பிரபல தொழில்நுட்ப தளமான சிநெட் ஆய்வு செய்து படங்கள் வீடியோவுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது. தரையில் நிறுவுவதை விட்டு ஏன் கடலிற்கு செல்ல வேண்டும் என்ற காரணங்களில் கடல் நீரின் மூலம் டேட்டா செண்டர்களை குளிர்மையாக வைத்திருக்க முடிவதே என்பது சாதகமாக இருந்தாலும் உண்மையில் இதற்கான வேறு காரணங்களும் இருக்கக்கூடும் என்று சந்தேகம் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. San Francisco Bay மற்றும் Maine இலிள்ள Portland துறைமுகம் ஆகிய இடங்களில் ...

புதிய பெயரில் ஸ்கை ட்ரைவினை வழங்கும் மைக்ரோசாப்ட்

Image
இணையத்தில் படங்கள் மற்றும் டாக்குமென்ட்களை சேமிப்பதற்கென இதுவரை மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில் சேவையை வழங்கி வந்தது. தற்போது புதிய ஒன்ட்ரைவ் One Drive என்ற பெயரில் மேலும் பல சலுகைகளுடன் சேமிப்பளவு சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். இதன் அறிமுக வீடியோ இது மேலும் ஒன் ட்ரைவ் மூலம் கூகிள் ட்ரைவ் ஐ விட அதிகளவு சேமிப்பளவை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தள இணைப்பு நன்றி  தமிழ் மீடியா 

பிப்ரவரி 23ல் சாம்சங் கேலக்ஸி S5

Image
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த காலக்ஸி வரிசை மொபைல் போன் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், சாம்சங் பல மாற்றங்களைத் தன் போன்களின் வடிவமைப்பிலும், இயக்கத்திலும் கொண்டு வர இருப்பதாகவும், அதன் தொடக்கமாக கேலக்ஸி 5 இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், விரைவில் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில், Mobile World Congress (MWC) பிப்ரவரி 23 அன்று இது வெளியாகலாம் என்று பலரும் உறுதியாக எதிர்பார்க்கின்றனர். வர்த்தக ரீதியாக வரும் ஏப்ரலில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த போனின் விலை காலக்ஸி எஸ்4 விலை அளவிலேயே இருக்கும் என்று தெரிகிறது. இது இரண்டு வடிவில் அமைக்கப்படும். உலோக கவசத்துடன், உயர் ரகமாகக் கூடுதல் விலையிலும், வழக்கமான பிளாஸ்டிக்கில் அமைக்கப்பட்டு, வழக்கமான விலையிலும் இது இருக்கலாம். உலோகக் கவசத்துடன் வடிவமைக்கப்படும் எஸ் 5, சாம்சங் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம். இதன் சிறப்பம்சங்கள் குறித்து வந்த வதந்தித் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதன் திரை 5.25 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். ப...