நான்கு மடங்கு வேகமான Intel 4th Generation ப்ராசசர்கள்

இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராசசர்கலுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த ஜூன் 27ஆம் நாள் இன்டெல் நிறுவனம் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது. இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே  இன்டெலின் 4ஆம் தலைமுறை ப்ரசாசர்கள் ஒரு பார்வை என்ற பதிவில் நான் இதன் ஒரு சில சிறப்பம்சங்களை பதிவிட்டுள்ளேன்.
 
சிறப்பசம்சங்கள்: 
  • கணினி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி
  • பழைய மடிக்கணினிகளை* விட 50% அதிக Battery Life (படங்கள் – Upto 11.2 hrs, வேலைகள் – upto 10.3 hrs)
  • ஆன் செய்த 3 நொடிகளில் கணினி இயங்க ஆரம்பித்துவிடும்.
  • Gaming Experience பழைய கணினிகளை* 20 மடங்கு சிறப்பானதாக இருக்கும்.
  • பழைய கணினிகளை* விட நான்கு மடங்கு அதிக வேகம்.
  • 20 நிமிட HD Video – களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி.
  • Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.
Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட பிரபலமான கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த 4ம் தலைமுறை இன்டெல் ப்ராசசர்களுடன் கணினி, மடிக்கணினிகளை தற்போது வெளியிட்டு வருகின்றது.
எனவே புதிதாக லேப்டாப் வங்குபவர்கள் இதனை மனதில் கொள்ளவும்.
நன்றி நண்பர்களே...!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?