அவசர காலப் பாதுகாப்பு தரும் ஜிவி மொபைல்

ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கூடுதல் வசதி உள்ள மொபைல் போன். 

இதில் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதனை இலக்காகக் கொண்டு இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆபத்தினை எதிர்நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும். ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர், அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ, அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ, உடன் அந்த போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர், அடுத்த எண்களை இதே போல அழைக்கும். 

இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. MP3, MP4, AVI or 3GP ஆகிய பார்மட்களில் உள்ள பைல்களை இயக்குகிறது. 
பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் வசதிகள் உள்ளன. சார்ஜ் செய்வதற்கும், டேட்டா மாற்றுவதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது. 
இவற்றுடன் மொபைல் ட்ரேக்கர், பிளாஷ் லைட், போல்டர் லாக், ஆட்டோ கால் பதிவு போன்ற வசதிகள் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியுடன் இதன் மெமரியினை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
Jivi 2010 கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டைலாக மெட்டலிக் மற்றும் குரோம் பூச்சு இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,699 என்றாலும், கடைகளில் ரூ.1,350க்குக் கிடைக்கிறது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?