தகவல் தொழில் நுட்ப சொற்களும் விளக்கமும்
சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் சொற்களாக இருந்தாலும், அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம்மால் வெளிப்படுத்த முடியாது. ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன்மையும், சாதனங்களின் செயல்பாடுகளுமே அவற்றின் தன்மையை முழுமையாக விளக்க முடியும். அப்படிப்பட்ட சில தொழில் நுட்ப சொற்கள் இங்கு தரப்பட்டுள்ளன. Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். MMC Multimedia Card: பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கைய...