வெளியானது Samsung Galaxy S4 - முழு விவரங்கள் மற்றும் விலை
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும். இது 5 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, RGB light, Geomagnetic, Pr...