Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?
Android, iPhone, Windows Mobile போன்ற Smart Phone களை பயன்படுத்தும்
நண்பர்கள் பலருக்கு அதில் உள்ள நிறைய Application-களை பிடித்து இருக்கும்.
அத்தோடு அவை கணினியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பதும்
உண்டு. உண்மையிலேயே அவற்றை கணினியில் பயன்படுத்த முடியும் தெரியுமா? எப்படி
என்று பார்ப்போம்.
pokki.com என்ற தளம் இந்த
வசதியை வழங்குகிறது. இந்த தளத்தில் சென்று. உங்களுக்கு தேவையான
Application-ஐ டவுன்லோட் செய்து நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
முதலில் Pokki Application - ஐ நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். Pokki.com முகப்பிலேயே இதை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.
அதை இன்ஸ்டால் ஆகி ரன் ஆகும். இப்போது உங்கள் Task Bar - இல் அதன் icon வந்து இருக்கும்.
மேலே படத்தில் Pokki-யும், அதன் Window-வும் உள்ளது.
இப்போது குறிப்பிட்ட Application- ஐ நீங்கள் தெரிவு செய்து Download கொடுத்தால் அது உங்கள் Task Bar க்கு வந்து சேரும்.
உங்களுக்கு எப்போது, எதைப் பயன்படுத்த வேண்டுமோ அப்போது அந்த App மீது கிளிக் செய்து பயன்படுத்த தொடங்கலாம்.
Smartphone - களில் எப்படி செயல்படுமோ அதே போலவே செயல்படுகிறது.
சில பிரபலமான Pokki Apps.
1. Instagrille
பிரபலமான Instagram ஐ கணினியில் பயன்படுத்தும் அனுபவத்தை தருகிறது. மிகச்
சிறப்பாக உள்ள இதில் ஒரு பிரச்சினை கணினியில் இருந்து நாம் படங்களை Upload
செய்ய இயலாது. மற்றவர் படங்களை பார்த்து அதற்கு கமெண்ட் போடலாம். விரைவில்
Upload வசதி வரும் என்று சொல்லப்படுகிறது.
2. Facebook
Smartphone- களில் எப்படி பேஸ்புக் இயங்குமோ அதே போலவே இயங்குகிறது.
NewsFeed, Notifications, Messages, Friend Requests போன்றவற்றை நாம்
எளிதாக காணலாம். புதிய Status போடலாம், அடுத்தவர்களுக்கு லைக், கமெண்ட்
செய்யலாம்.
யாருடைய Profile-க்கும் நாம் செல்ல முடியாது. அதுதான் இதன் குறை. விரைவில் அதுவும் வரும் என்று நம்புவோம்.
3. Gmail
மிக அழகாக இருக்கும் இது தான் எனக்கு மிகவும் பிடித்த App. நாம் படிக்காத
மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை Taskbar-இல் கட்டுவது அழகோ அழகு.
4. Tweeki
ஜிமெயில்க்கு அடுத்து அழகான Application. Timline, Interactions, Messages என ஒவ்வொன்றும் தனித் தனியாக காட்டப் படுகிறது.
Comments