சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு பார்வை...
ஜூலை மாதம் இங்கிலாந்தில் ஒலிம்பிக் மட்டும் துவங்கவில்லை... இன்னொரு
முக்கியமான நிகழ்வும் நடந்திருக்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயும்
காஸ்மாலஜி படிப்புக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்ட உலகின் முதல்
காஸ்மாலஜி சூப்பர் கம்ப்யூட் டர் இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம்தான்
அறிமுகப்படுத்தப்பட்டது.
வானவியலிலும்
பிரபஞ்ச அறிவியலிலும் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மிகவும் உதவிகரமாக
இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், இருக்குற கஷ்டத்துல இது வேற தேவையா
என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
ஆம், ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை நிர்வகிப்பது என்பது யானையைக் கட்டி மூன்று வேளை ஃபுல் மீல் போடுவது போன்றது.
உதாரணத்துக்கு,
கடந்த 2010 முதல் 2011 வரை உலகின் நம்பர் ஒன் சூப்பர் கம்ப்யூட்டராக
இருந்த கே கணினியைப் பற்றிப் பார்ப்போமே. நாம் வீட்டில் பயன்படுத்தும்
கணினியில் இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று கோர் ப்ராசஸர்கள் வருகின்றன.
இந்த
கே கணினியின் ப்ராசஸர் கோர்களின் எண்ணிக்கை 5,48,352. இந்தக் கணினிக்குத்
தேவையான வன்பொருட்கள் எல்லாம் நீண்ட பெரிய அறை ஒன்றில் ரேக்குகள் அமைத்து
அடுக்கப்பட்டிருக்கும். அப்படி 672 ரேக்குகளைக் கொண் டது கே கணினி.
இத்தனை பிரமாண்டமான கணினிகள் இயங்க வேண்டுமென்றால், அதற்கான மின்சாரமும் பிரமாண்ட அளவில்தான் தேவைப்படும்.
உதாரணத்துக்கு
கே கணினி, தான் இயங்குவதற்கு 9.9 மெகா வாட் மின்சாரத்தை எடுத்துக்
கொள்கிறது. இதற்காக வருடத்துக்கு மின்சார செலவு மட்டுமே ஒரு கோடி அமெரிக்க
டாலர்கள் செலவாகிறது.
உலகின்
டாப் 10 சூப்பர் கம்ப்யூட்டர் என்று பட்டியலிடப்பட்டுள்ள பத்து கணினிகளும்
இயங்க மொத்தம் 42.8 மெகா வாட் மின்சாரம் செலவாகிறது. இதை 40 ஆயிரம்
வீடுகளுக்கு வழங்க முடியுமாம்.
புவி
வெப்பமடைதல், மின்சார சிக்கனம் என்றெல்லாம் உலகமே பேசிக் கொண்டிருக்கும்
இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு சூப்பர் கணினி தேவையா என்பதே சமூக
ஆர்வலர்களின் கேள்வி! எதற்காக சூப்பர் கம்ப்யூட்டர்?
பெரிய
செலவுதான் என்றாலும் இது தண்டச் செலவில்லை. நாளைய உலகுக்காக செய்யப்படும்
அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மிகுந்த செயல் திறன் கொண்ட கணினிகள்
கண்டிப்பாகத் தேவை. அதற்காகத்தான் உலக நாடுகள் பலவும் போட்டி போட்டுக்
கொண்டு சூப்பர் கணினிகளைத் தயாரிக்கின்றன.
நம்
இந்தியாவில் கூட சாகா-220 என்ற சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டு
புனேயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள முக்கியமான 500 சூப்பர்
கம்ப்யூட்டர்களில், 274 அமெரிக்காவுக்குச் சொந்தமானவை. அடுத்தபடியாக
சீனாவில் 41 உள்ளன. இந்தியாவில் 40 உள்ளது. ஆக, நாமும் போட்டியில்
இருக்கிறோம்!
Comments