ஓவியம் வரையப் பயன்படும் இலவச மென்பொருள்
ஓவியம் வரைய எண்ணற்ற மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது. ஏன்.. நம் கணினியிலேயே கூட MS paint போன்ற வரையும் மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை விட ஒரிஜினல் ஓவியத்தைப் போன்ற தோற்றத்தில் ஓவியம் வரைய இந்த எளிய மென்பொருள் Smooth draw பயன்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இம்மென்பொருளில் எளிதாக ஓவியம் வரையலாம். ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளலாம். இம்மென்பொருளில் ஓவியம் வரைவதற்குப் பயன்படும் கருவில், பென்சில், பேனா, ஏர் ஸ்பிரே(Air Spray), வாட்டர் கலர் (Water color), வித விதமான பிரஸ்கள் (variety brushes),போன்ற அனைத்து ஓவியக் கருவிகளும் நிறைந்து காணப்படுகின்றன. GIMP, PHOTOSHOP போன்ற மென்பொருள்களில் காணப்படும் வசதிகளைப் போன்றே, Layer வசதி, Smudge tool, blur too, burn tool, sharpener tool ஆகிய கருவிகளையும் உள்ளடக்கி உள்ளது. இம்மென்பொருள் மூலம் வரைந்த ஓவியங்களை, bmp, Jpeg, PNG, gif கோப்பு வடிவங்களில் சேமிக்க முடியும் என்பது கூடுதல் வசதி. ஆக இது ஒரு மினி PHOTOSHOP SOFTWARE என்று சொன்னால் மிகையாகாது. மென்பொருளை தரவிறக்கச் சுட்டி English summary...