Posts

மொபைலில் பிரைவசி பற்றி பயமா..?

Image
ஐபோன் பயனாளிகளுக்கும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு எனச் சொல்கிறது கிளவுட் ஸ்டோரேஜின் நிறுவனமான ஐடிரைவின் சமீபத்திய ஆய்வு.  ஐபோன் பயனாளிகளை விட ஆண்ட்ராய்டு பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமானது எனும் நிலையில் இந்நிறுவனம் இரு தரப்பிலும் 20,000 பயனாளிகளை எடுத்துக்கொண்டு அவர்களின் மொபைல் செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தியது.  அந்தரங்க விவரங்களைக் காப்பது என வரும்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. இதன் விவரங்கள் சில; ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் 33 சதவீதம் புகைப்படங்களை பேக் அப் எடுக்கின்றனர். கிளவுட் சேவைகளை என்கிரிப்ட் செய்வதில் ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் 25 சதவீதம் கூடுதலாகக் கவனம் செலுத்துகின்றனர்.  இந்த வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் இரு பயனாளிகளிலுமே பிரைவசி பற்றிக் கவலைப்படாதவர்கள் தொடங்கி மிகவும் ஆழமாகக் கவலைப்படுபவர்கள்வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி நிலவைத்தேடி

இணைய சந்தையில் கடும் போட்டி..

Image
இந்தியாவில், 4ஜி அலைவரிசைப் பயன்பாடு, வரும் ஆண்டில் வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், 1.5 கோடி பேர், இந்த அலைவரிசையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் தகவல் பரிமாற்ற சேவை நிறுவனங்கள், 1,800 MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை இதற்குப் பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர்கள், மொபைல் டேட்டா பரிமாற்றத்தில் கூடுதல் வேகத்தினைக் கொள்ள விரும்புவதால், நிச்சயம் 4ஜி அலைவரிசைப் பயன்பாட்டினை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. PwC India என்ற அறிக்கையில் இந்த கணிப்புகள் தரப்பட்டுள்ளன.  ஏற்கனவே பாரதி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஏற்கனவே 4ஜி அலைவரிசை சேவையினை வழங்கி வருகின்றனர். கொல்கத்தாவில், 2012 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, பின்னர் பல நகரங்களில் விரிவடைந்தது இந்த சேவை. 2014 ஆம் ஆண்டில், ஜூலை மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமானது. ஏர்செல், இதே சேவையினை, 2014ல், தெலுங்கானா, ஒடிஷா, அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது.  தற்போது ரிலையனஸ...

எக்ஸெல்லில் வியக்க வைக்கும் ஸ்குரோலிங் நுட்பம்..

Image
பைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது  உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும்.  நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.  சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து...

HTC டிசையர் ஐ செல்ஃபி ஸ்மார்ட்போன்..

Image
புதன்கிழமை அன்று HTC நிறுவனம் இந்தியாவில் HTC டிசயர் ஐ செல்ஃபி ஸ்மார்ட்போன் ரூ.35,990 விலையில் கிடைக்கும் என்று மும்பையைச் சார்ந்த  சில்லறை விற்பனையாளர் அறிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் தற்போது கிடைக்கும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியபோது விலை விவரங்களை அறிவிக்கப்படவில்லை மற்றும் இந்த சாதனம் நவம்பர் மாதத்திற்கு பிறகு அமேசான்.காம் வளைத்தளத்தில் ப்ரத்யேகமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது-. ஆனால் இன்னும் HTC இந்தியாவின் வளைத்தளத்தில் விரைவில் கிடைக்கும் என்று தான் அறிவித்திருக்கிறது.  HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன், முன் எதிர்கொள்ளும் கேமராவில் செல்ஃபி போகஸ்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலுமே டூயல் எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைந்து 13 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டிருக்கிறது. முன் எதிர்கொள்ளும் கேமராவில் ஹய் ரெசல்யூசன் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் ஆகும். முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 1080p @ 30fps வீடியோக்கள் படம் பிடி...