HTC டிசையர் ஐ செல்ஃபி ஸ்மார்ட்போன்..



புதன்கிழமை அன்று HTC நிறுவனம் இந்தியாவில் HTC டிசயர் ஐ செல்ஃபி ஸ்மார்ட்போன் ரூ.35,990 விலையில் கிடைக்கும் என்று மும்பையைச் சார்ந்த 
சில்லறை விற்பனையாளர் அறிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் தற்போது கிடைக்கும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியபோது விலை விவரங்களை அறிவிக்கப்படவில்லை மற்றும் இந்த சாதனம் நவம்பர் மாதத்திற்கு பிறகு அமேசான்.காம் வளைத்தளத்தில் ப்ரத்யேகமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது-. ஆனால் இன்னும் HTC இந்தியாவின் வளைத்தளத்தில் விரைவில் கிடைக்கும் என்று தான் அறிவித்திருக்கிறது. 

HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன், முன் எதிர்கொள்ளும் கேமராவில் செல்ஃபி போகஸ்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலுமே டூயல் எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைந்து 13 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டிருக்கிறது. முன் எதிர்கொள்ளும் கேமராவில் ஹய் ரெசல்யூசன் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் ஆகும். முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 1080p @ 30fps வீடியோக்கள் படம் பிடிக்க முடியும். பின்புற கேமரா அம்சங்கள் a f/2.0 aperture மற்றும் ஒரு 28mm லென்ஸ் உள்ளது. முன் எதிர்கொள்ளும் கேமரா அம்சங்கள் a f/2.2 aperture மற்றும் ஒரு20mm லென்ஸ் உள்ளது. 

இரண்டு கேமரா சென்ட்ரிக் அப்ளிக்கேஷன் அதாவது ஐ எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் சமீபத்திய பதிப்பான HTCஸோ, ஒரு வீடியோ எடிட்டிங் டூல் போன்றவை HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கேமரா அம்சங்களான ஸ்ப்லிட் கேப்ச்சர், Crop-Me-In போன்றவை HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்டுள்ளது. 

HTC டிசயர் ஐ மற்ற குறிப்புகள், இதில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 2GB RAM உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 801 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. மேலும் இதில் 2400mAh லி-போ பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. முன் எதிர்கொள்ளும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் HTC பூம் சவுண்டு தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. கைபேசியில் 151.7x73.8x8.5mm மெஷர்ஸ் அளவிடுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சிகப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ், ப்ளூடூத் v4.0, மைக்ரோ-யுஎஸ்பி, FM ரேடியோ, ஜிஎஸ்எம், மற்றும் 3ஜி உள்ளிட்டவை அடங்கும். மேலும் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கிரையோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது. 

HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே,
  • 2GB RAM,
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 801 ப்ராசசர்,
  • microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • Wi-Fi 802.11 a/b/g/n/ac,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத் v4.0,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • FM ரேடியோ,
  • ஜிஎஸ்எம்,
  • 3ஜி,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 2400mAh லி-போ பேட்டரி.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க