Posts

விண்டோஸ் XPயிலிருந்து விண்டோஸ் 7 மாற வேண்டுமா..?

Image
விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் பைல்கள் இனி கட்டாயமாக நிறுத்தப்படும் என, அதற்கான நாளை (ஏப்ரல் 8) மைக்ரோசாப்ட் அறிவித்ததிலிருந்து, பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 7க்கு மாறி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் இடையே பல வேறுபாடுகளை அவற்றின் செயல்பாட்டில் காணலாம். இவற்றைப் புரிந்து கொண்டால், சிஸ்டம் மாறுவது எந்த பிரச்னையையும் தராது. மேலும், வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால், இயக்குவது எளிமையாகவும், கூடுதல் பலன்களைத் தருவதாகவும் அமையும். விண்டோஸ் 7 மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலிருந்து மாறுபாடுகள் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 13 ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்த எக்ஸ்பியுடன் ஒப்பிடுகையில், அதிக வேறுபாடுகளைக் காணலாம். இருப்பினும், எக்ஸ்பிக்குப் பின்னால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் பார்த்தால், விண்டோஸ் 7 ஒரு பயனுள்ள சிஸ்டமாகவே இருக்கிறது. கூடுதல் பாதுகாப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் இணைந்த செயல்பாடு, கூடுதல் சக்தி என இதனைச் சுருக்கமாகக் கூறலாம். இவற்றைத் தரும் சில அம்சங்களை இங்கு காணலாம். 1. டாஸ்க...

எத்திகல் வோர்ம் பற்றி தெரியுமா?

Image
Worm என்ற பெயர் இது வைரஸின் ஒரு பிரிவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பலாம். இது தீமை விளைவிக்கும் புரோகிராம் அல்ல. இதன் செயல்படும் தன்மை, வைரஸ் ஒன்றின் செயல்பாட்டின் சாயலை ஒத்திருப்பதால், இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த புரோகிராம், நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களைத் தேடி, அவற்றில் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட வேண்டியதிருந்தால், பயனாளருக்குத் தெரியாமலேயே அதனை அப்டேட் செய்திடும். அதே போல பிழைக் குறியீடுகளுக்கான பேட்ச் பைல் டவுண்லோட் செய்து அமைக்கப்படாமல் இருந்தால், அதனையும் இயக்கி வைக்கும். நன்றி நிலவைத்தேடி

எக்ஸெல்லில் என்டர் கீ என்ன செய்யும்

Image
எக்ஸெல் என்டர் கீ: எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை நீங்கள் விரும்பும் வகையில் மேற்கொள்ளுமாறு செய்திடலாம். பொதுவாக செல் ஒன்றில் டேட்டாவினை என்டர் செய்தவுடன், என்டர் கீயினை அழுத்துவது வழக்கமான வேலையாகும். அவ்வாறு செய்திடுகையில் உங்கள் விருப்பப்படி என்டர் கீக்கான பணியை நிர்ணயம் செய்திடலாம். ஒன்றுமே நடக்காத படி செய்திடலாம். அல்லது கீழே உள்ள செல்லுக்குக் கர்சர் செல்லாமல், பக்கத்தில் உள்ள செல்லுக்குச் செல்லும்படி அமைத்திடலாம். இதற்கான வழிகள்: 1. டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் தரும். 2. இதில் உள்ள டேப்களில் எடிட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 3. Move Selection After Enter என்ற வரி அருகே உள்ள செக் பாக்ஸைக் காணவு...

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏப்ரல் 8ம் தேதி கல்லறை

Image
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வரும் சேவை வரும் ஏப்ரல் 8ம் தேதி உடன் நிறுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால் ஏடிஎம் சேவைகள் உட்பட, வங்கி சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2001ம் தேதி வெளியிடப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஏப்ரல் 8ம் தேதி உடன் அதனுடைய பயன்பாட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இயங்கு தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு தொழில்நுட்ப சேவைகளையும் மைக்ரோசாஃப்ட் வரும் 8ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள உள்ளது. ஏடிஎம் சேவைகள் உட்பட, கணினிகளிலும் தற்போது வரை விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது. நன்றி நிலவைத்தேடி