டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் சேரும் தேவையற்றவற்றை நீக்குவது போல, ஆன்ட்ராய்ட் போனிலும் அது போன்ற சுத்தப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ள இயலுமா? அப்படியானல் அவை என்ன? என்று கூறவும் என வேண்டுகோள் தந்தனர். அந்த நோக்கில் சிந்திக்கையில், தென்பட்ட சில முக்கியமான செயல்பாடுகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொண்டால், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், அதிக பட்ச பயன்களை, எந்தவிதமான சிக்கல்கள் இன்றிப் பெறலாம். இதோ அவை: இங்கு தரப்படும் டிப்ஸ் மற்றும் குறிப்புகள் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கும் பொதுவானவையாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும், இவற்றைப் பயன்படுத்தலாம். எந்த நாட்டில், இடத்தில் இவை இயக்கப்பட்டாலும், இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி, எந்த நிலையில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவராக ஒரு பயனாளர் இருந்தாலும், அவர் இவற்றைப் பயன்படுத்தலாம். அதிக ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய உதவிக் குறிப்புகள் இவை இல்லை. தேவையற்றதை நீக்குக: இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள சிறிது கூடு...