Posts

Showing posts from March, 2015

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப்(App) அறிமுகம்..

Image
ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே " அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே..! " என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க ' ராகெம் ' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய அப்ளிகேஷன் பற்றி, நியூயார்க்கில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு கூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும். பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.“ என்றார். செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, ராகெம் (RakEM) தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோரில் ராகேம் (RakEM) App...

மைக்ரோசாப்ட்டின் புத்தம் புது Foldable கீ போர்ட்..

Image
தன்னுடைய லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின் அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும் விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம். இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10 சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப் பொறுத்து வேறுபடும்.  ஏறத்தாழ 20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதி...

உலக நெடுஞ்சாலைகளை கலக்க வரும் பகுதிநேர தானியங்கி லாரிகள் வீடியோ இணைப்பு

Image
சென்னையில் இருந்து ஒரு லோடு மஞ்சளை லாரியில் கொண்டு சென்று கொல்கத்தாவில் சேர்ப்பிக்க வேண்டுமானால் சுமார் 1700 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக சென்றடைய வேண்டும். மணிக்கு சராசரியாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சென்றாலும் கூட குறைந்தபட்சம் 30 மணிநேரம் ஒரு டிரைவர் லாரியை ஓட்டிச்செல்ல வேண்டும். 500 கிலோ மீட்டருக்கு 2 மணி நேரம் ஓய்வு எடுத்து சென்றாலும் ஒன்றரை நாள் பயணத்துக்கு பின்னரே கொல்கத்தா நகரை சென்றடைய முடியும். கொல்கத்தாவை சென்று சேர்ந்த பின்னர் பயண நேரத்துக்கு அதிகப்படியான நேரம் ஓய்வு எடுத்த பின்னரே அடுத்த சவாரிக்கு அந்த டிரைவர் தயாராக முடியும்.  இப்படிப்பட்ட தொலைதூர பயணத்தை நெடுஞ்சாலை பாதையில் மேற்கொள்ளும் லாரி டிரைவர்களுக்கு வரப்பிரசாதமாக கனரக வாகன உற்பத்தியில் உலகின் முன்னோடி நிறுவனமான ஜெர்மனியின் ‘பென்ஸ்’ மோட்டார்ஸ், பகுதிநேரம் தானியங்கி முறையில் (ஆட்டோ பைலட்) இயங்கும் ‘ஃபியூச்சர் டெக்’ லாரிகளை தயாரித்து வருகின்றது.  இந்த லாரிகள் 4 வழிப்பாதை மற்றும் 6 வழிப்பாதை கொண்ட நெடுஞ்சாலைகளில் ஓடும் போது, டிரைவர் ஓய்வெடுக்க விரும்பினால்...

பேஸ்புக்கில் பணம் அனுப்ப புத்தம் புது வசதி..

Image
பேஸ்புக் நிறுவனம் வரைவில் மெசேஜிங் அப்ளிக்கேஷன் மூலம் நண்பர்களுக்கு பணம் அனுப்பவும் மற்றும் பெறுவதற்கும் ஒரு புதிய அப்ளிக்கேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை PayPal மற்றும் ஸ்நெப்சேட் உள்ளிட்டவை இணைந்து வங்கி கணக்குகள் அல்லது கிரேடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்களுடைய பணத்தை அனுப்பலாம். இந்த சேவை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களில் உபயோகப்படுத்தலாம். உலகின் மிகப் பெரிய சமூக நெட்வொர்க்கான பேஸ்புக் நிறுவனம் பணம் செலுத்தும் முறைகளை செயல்முறைப்படுத்தியும் மற்றும் அதன் சேவை பாதுகாப்பு அம்சங்களையும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பணத்தை அனுப்ப, பேஸ்புக் மெசெஞ்ஜர் அப்ளிகேஷனில் ஸ்டிக்கர்கள் அல்லது ஒரு தம்ஸ் அப் அடையாளம், புகைப்படங்கள் அனுப்பும் பட்டன்களுக்கு அடுத்து ‘$’ என்ற புதிய பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு நீங்கள் அனுப்ப விரும்பும் பணத்தை டைப் செய்து வல...

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு..

Image
திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் வகையில், விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் நான்கில் மூன்று பங்கு உரிமம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் உபயோகிக்கும் பெண்களுக்கு..

Image
உஷார் சகோதரிகளே /தோழிகளே..! பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில். என்ன ஆபத்துகள்? ********************* * யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும். * உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும். * கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும். * உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது. * உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும...

வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு..

Image
உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது.  நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.  இதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர்.  ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன.  இதிலிருந்து தப்பிக்கும் வழி...

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் கம்ப்யூட்டர் ஓர் பார்வை..

Image
சென்ற வாரம், செவ்வாய் அன்று, தன்னுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட 12 அங்குல திரை கொண்ட, 13.1 மிமீ தடிமன் கொண்ட மேக் புக் கம்ப்யூட்டரை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.  தொடக்க நிலையில் உள்ள ஆப்பிள் மேக் புக் ஏர் மற்றும் உயர் நிலையில் உள்ள, ஆப்பிள் மேக் புக் ப்ரோ ஆகியவற்றிற்கு இடையே இது இடம் பெறுகிறது.  இதன் சிறப்பம்சங்களாக, 13 மிமீ அளவிலான இதன் அடிப்பாகம், 907 கிராம் எடை, நாள் முழுவதும் மின் சக்தி தரக்கூடிய பேட்டரி ஆகியவற்றைக் கூறலாம்.  இன்டெல் கோர் எம் ப்ராசசர் மற்றும் பேட்டரியால், குறைந்த தடிமனில் கம்ப்யூட்டர் அமைந்துள்ளது. இந்த ப்ராசசர், உள்ளாக வெப்பத்தை வெளியேற்றும் மின்விசிறி தேவையை நீக்குகிறது.  எனவே கம்ப்யூட்டரின் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டரில் தான், ஆப்பிள் முதல் முறையாக, யு.எஸ்.பி. /சி போர்ட்டினைத் தந்துள்ளது. இது பவர், விடியோ அவுட்புட் மற்றும் டேட்டா ஆகிய அனைத்திற்கும் ஒன்றாக, ரிவர்ஸ் அமைப்பில் உள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டர் மூன்று வண்ணங்களில், சில்வர், கிரே மற்றும் தங்க நிற வண்ணங்களில், வடிவமைக்கப்பட்டு கி...

Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போன்..

Image
Xiaomi நிறுவனம் Redmi 1S, வெற்றியை தொடர்ந்து Redmi 2 ஸ்மார்ட்போனை ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போன்  மார்ச் 24ம் தேதி முதல் தனது முதல் ஃபிளாஷ் விற்பனை மூலம் கிடைக்கும். மற்றும் வாடிக்கையாளர்கள் Flipkart வளைத்தளம் வழியாக வியாழக்கிழமை (மார்ச் 12) மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம். இது, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ண வகைகளில் கிடைக்கும்.  டூயல் சிம் டூயல் காத்திருப்பு ஆதரவு கொண்ட Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் சொந்த MIUI 6 ஸ்கின் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 312ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் Adreno 306 ஜிபீயூ மற்றும் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் 1.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 ப்ராசசர் (Cortex-A53) மூலம் இயக்கப்படுகிறது.  Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வ...

ஸ்மார்ட் போன் ஏற்படுத்தும் பாதிப்புகள்..

Image
நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக இருந்தால் உங்கள் புத்திசாலித்தனம் மங்கும் அபாயம் இருக்கிறது. ஸ்மார்ட் போன் தாக்கம் தொடர்பாக, கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு இப்படி எச்சரிக்கிறது. உள்ளுணர்வின்படி முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் சோம்பல் மிக்கவர்களாக மாறிவிடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. தாங்கள் அறிந்திருக்கும் தகவல்கள் அல்லது எளிதாகக் கற்றுக்கொள்ள கூடிய விஷயங்களைக்கூட ஸ்மார்ட் போன் மூலம் தேடிப்பார்க்கும் பழக்கம்தான் இதற்குக் காரணம் என்கிறார் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் கார்டன் பென்னிகுக். அதிகப்படியான ஸ்மார்ட் போன் பயன்பாடு, புத்திசாலித்தனம் குறைவது ஆகிய இரண்டுக்கும் தொடர்பு இருப்பதையும் ஆய்வு உணர்த்தியுள்ளது. நம்முடைய அறிவாற்றலைப் பயன்படுத்த மறுப்பதால் வயோதிக காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார். நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை மனதில் நிறுத்தி இது தொடர்பாக சுய ஆய்வு மேற்கொண்டு பார்க்கலாம்.....

வேர்டில் டெக்ஸ்ட்டில் ட்ராப் ஷேடோ செய்வது எப்படி..??

Image
காப்பி/பேஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், வேறு ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டும் வேலையை  மேற்கொள்வோம். அப்போது டெக்ஸ்ட் ஏற்கனவே எந்த பார்மட்டில் உள்ளதோ, அதே பார்மட்டில் ஒட்டப்படும். இது ஒட்டப்படும் டாகுமெண்ட்டுடன் ஒத்துப் போகாத வகையில், தேவையற்ற போல்ட், இடாலிக்ஸ் ஆகியவற்றுடன் அமைக்கப்படும்.  இப்படி இல்லாமல், ஒட்டப்படும் டெக்ஸ்ட்டின் பார்மட்டுக்கு ஏற்ற வகையில் அமைத்திட வேர்ட் வழி ஒன்றைக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை Ctrl + C கொடுத்து காப்பி செய்திடுகிறோம். பின்னர் கண்ட்ரோல் + வி கொடுத்து ஒட்டுகிறோம். இதற்குப் பதிலாக, Ctrl + Alt + V கொடுத்துப் பாருங்கள். உடன் Paste Options என்னும் விண்டோ கொடுக்கப்படும். இதில் ஒட்டப்படும் டெக்ஸ்ட் எந்த பார்மட்டில் இருக்க வேண்டும் என்பதற்கான வகைகள் தரப்படும். அவை: Microsoft Word Object, Formatted Text (RTF), Unformatted Text, Picture (Windows Metafile), Picture (Enhanced Metafile), HTML format, Unformatted Unicode Text. இவற்றில் Unformatted Text என்பதனைத் தேர்ந்தெடுத்தால், எடுக்கப்பட்ட பைலி...

எக்ஸெல்லில் ஹெடர் புட்டர் எழுத்துக்கள்..

Image
ஷார்ட்கட் வழிகள்: Ctrl + 1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின்  வடிவமைப்பை மாற்றலாம்  F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.  Ctrl + Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl + Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.  Ctrl + Shift + ” : இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.  Ctrl + ': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.  Ctrl + R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.  Ctrl + D: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.  Ctrl + ': செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக்களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்...