Posts

Showing posts from January, 2015

மொபைலில் பிரைவசி பற்றி பயமா..?

Image
ஐபோன் பயனாளிகளுக்கும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு எனச் சொல்கிறது கிளவுட் ஸ்டோரேஜின் நிறுவனமான ஐடிரைவின் சமீபத்திய ஆய்வு.  ஐபோன் பயனாளிகளை விட ஆண்ட்ராய்டு பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமானது எனும் நிலையில் இந்நிறுவனம் இரு தரப்பிலும் 20,000 பயனாளிகளை எடுத்துக்கொண்டு அவர்களின் மொபைல் செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தியது.  அந்தரங்க விவரங்களைக் காப்பது என வரும்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. இதன் விவரங்கள் சில; ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் 33 சதவீதம் புகைப்படங்களை பேக் அப் எடுக்கின்றனர். கிளவுட் சேவைகளை என்கிரிப்ட் செய்வதில் ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் 25 சதவீதம் கூடுதலாகக் கவனம் செலுத்துகின்றனர்.  இந்த வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் இரு பயனாளிகளிலுமே பிரைவசி பற்றிக் கவலைப்படாதவர்கள் தொடங்கி மிகவும் ஆழமாகக் கவலைப்படுபவர்கள்வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி நிலவைத்தேடி

இணைய சந்தையில் கடும் போட்டி..

Image
இந்தியாவில், 4ஜி அலைவரிசைப் பயன்பாடு, வரும் ஆண்டில் வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், 1.5 கோடி பேர், இந்த அலைவரிசையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் தகவல் பரிமாற்ற சேவை நிறுவனங்கள், 1,800 MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை இதற்குப் பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர்கள், மொபைல் டேட்டா பரிமாற்றத்தில் கூடுதல் வேகத்தினைக் கொள்ள விரும்புவதால், நிச்சயம் 4ஜி அலைவரிசைப் பயன்பாட்டினை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. PwC India என்ற அறிக்கையில் இந்த கணிப்புகள் தரப்பட்டுள்ளன.  ஏற்கனவே பாரதி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஏற்கனவே 4ஜி அலைவரிசை சேவையினை வழங்கி வருகின்றனர். கொல்கத்தாவில், 2012 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, பின்னர் பல நகரங்களில் விரிவடைந்தது இந்த சேவை. 2014 ஆம் ஆண்டில், ஜூலை மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமானது. ஏர்செல், இதே சேவையினை, 2014ல், தெலுங்கானா, ஒடிஷா, அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது.  தற்போது ரிலையனஸ...

எக்ஸெல்லில் வியக்க வைக்கும் ஸ்குரோலிங் நுட்பம்..

Image
பைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது  உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும்.  நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.  சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து...

HTC டிசையர் ஐ செல்ஃபி ஸ்மார்ட்போன்..

Image
புதன்கிழமை அன்று HTC நிறுவனம் இந்தியாவில் HTC டிசயர் ஐ செல்ஃபி ஸ்மார்ட்போன் ரூ.35,990 விலையில் கிடைக்கும் என்று மும்பையைச் சார்ந்த  சில்லறை விற்பனையாளர் அறிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் தற்போது கிடைக்கும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியபோது விலை விவரங்களை அறிவிக்கப்படவில்லை மற்றும் இந்த சாதனம் நவம்பர் மாதத்திற்கு பிறகு அமேசான்.காம் வளைத்தளத்தில் ப்ரத்யேகமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது-. ஆனால் இன்னும் HTC இந்தியாவின் வளைத்தளத்தில் விரைவில் கிடைக்கும் என்று தான் அறிவித்திருக்கிறது.  HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன், முன் எதிர்கொள்ளும் கேமராவில் செல்ஃபி போகஸ்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலுமே டூயல் எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைந்து 13 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டிருக்கிறது. முன் எதிர்கொள்ளும் கேமராவில் ஹய் ரெசல்யூசன் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் ஆகும். முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 1080p @ 30fps வீடியோக்கள் படம் பிடி...

வியூசோனிக் V55 ஸ்மார்ட்போன்..

Image
ஐரிஸ் ஸ்கேனிங் மற்றும் ரெகக்னைஷேசன் (recognition) தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மாரட்போனை புத்தாண்டு அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  பெரிய டிஸ்ப்ளே தொடர்புடைய நிறுவனமான, வியூசோனிக் நிறுவனம் ஐரிஸ் ரெகக்னைஷேசன் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை ஜனவரி மாதத்தில் வெளியிடவுள்ளது.  வியூசோனிக் V55 ஸ்மார்ட்போன் கைபேசியின் மேல் வலது மூலையில் ஐரிஸ் ஸ்கேனர் அடங்கும் மற்றும் ஒரு சிறிய துண்டினால் அது மூடப்பட்டிருக்கும். யூசர்கள் இந்த ஸ்கேனரை பயன்படுத்த சிறிய துண்டினை (ஸ்லைடு) நகர்த்த வேண்டும். ஸ்லைடை திறந்தவுடனே லைட் எரியும், அது ஐரிஸ் ஸ்கேனிங் செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று அறிக்கை கூறுகிறது.  மேலும் யூசர்கள் V55 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தனிப்பட்ட கோப்புகள் (files) மற்றும் ஆவணங்களை (documents) பாதுகாக்க முடியும் என்றும் கூறுகிறது. ஐரிஸ் ரெகக்னைஷேசன் சென்சார் மூலம் பாதுகாக்கப்படும் தகவல்களை அணுக, உங்களுடைய கண்ணை சென்சார் ஸ்கேன் செய்து, பூட்டிய தகவல்களை திறக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  வியூசோனிக்...

மொபைலில் தகவல் பரிமாற்ற புரட்சி

Image
அண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (BroadbandTech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.  இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் ஆலோசகர் ஏ.கே. பார்கவா உரையாற்றுகையில், “புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதிகமான தகவல் பதிவு மற்றும் பரிமாற்றம் காரணமாக, டேட்டா பரிமாற்ற கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.  மத்திய அரசு 3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை வரிசைக்கான ஏலத்தினை நடத்துவதில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், டேட்டா பரிமாற்ற கட்டணத்தைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறது.  அலைக்கற்றை வரிசை அதிகமாகவே கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதால், டேட்டா பரிமாற்ற சேவையில், பைபர் ஆப்டிகல் துணையுடன் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். இதனால், பொதுத்துறை மற்றும் தனியார்...

கணனியில் வாட்ஸ் அப்..

Image
ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் மேசேஜிங் சேவை பிரலமாகவே அது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது.  அது வாட்ஸ் அப்பை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்த முடியுமா? என்பதுதான். இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் வாட்ஸ் அப் , டெஸ்க்டாப்பில் செயல்படக்கூடிய வடிவத்தை உருவாக்கி வருவதாகச் செய்தி வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப் இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் கூறாவிட்டாலும் கூட, வாட்ஸ் அப் அப்டேட்டில் , இதற்கான அறிகுறி இருப்பதாக ஆண்ட்ராய்டு வேர்ல்டு இணையதளம் தெரிவித்துள்ளது. அந்த அப்டேட்டில் வாட்ஸ் அப் வெப் எனும் தொடர் வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போட்டியாளர்களான வைபர், டெலிகிராம் ,வீசாட் மற்றும் லைன் ஆகியவை ஏற்கனவே டெஸ்க்டாப்பில் பயன்படுத்தக்கூடிய இணைய வடிவத்தையும் பெற்றிருப்பதால் வாட்ஸ் அப்பும் இந்த வசதியை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நன்றி நிலவைத்தேடி