கடல் மட்டம் உயர்வதால் மும்பை உள்பட பல நகரங்கள் கடலில் மூழ்க வாய்ப்பு. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
பூமி வெப்பமடைவது அதிகரித்துள்ளதால் வறட்சி, புயல், அனல் காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பது குறித்து பருவநிலை மாற்றங்கள் ஆய்வுக்காக நோபல் பரிசு வென்ற குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து 594 பக்க அறிக்கை தயாரித்துள்ளனர். இது வாஷிங்டனில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்கள், அங்குள்ள வாழ்க்கை முறைகளால் பூமி வெப்பமடைவது அதிகரிக்கிறது. இதனால் புயல், பெருவெள்ளம், வறட்சி ஏற்படுகிறது. இந்தியாவில் மும்பையில் மக்கள் தொகை அதிகம். கடந்த 2005ம் ஆண்டு பெய்த பயங்கர மழையால் 3 அடி உயரத்துக்கு பெருவெள்ளம் நகரை சூழ்ந்தது. அப்போது ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். இப்போதும் 27 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பெருவெள்ளம் உள்ள அபாயகரமான பகுதிகளில் வசிக்கின்றனர். பனி மலைகள் உருகி கடல்மட்டம் உயர்வதால் இந்த பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதேபோல் மியாமி (அமெரிக்கா), பாங்காக் (தாய்லாந்து), ஷாங்காய், குவாங்ஜூ (சீனா), ஹோ சி மின் (வியட்னாம்), யாங்கூன் (மியான்மர்), மும்பை, கொல்கத்தா (இந்தியா) போன்ற நகரங்களும் இயற்கை சீற்றங்களால் ...