Posts

விண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா?

Image
விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர். 1. நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 8 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அது உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால், விண்டோஸ் 8.1க்கு அவசியம் மாறிக் கொள்ளுங்கள். இலவசமாகவே மைக்ரோசாப்ட் இதனைத் தருகிறது. 2. நீங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறீர்களா? அது உங்களுக்கு சகல விதத்திலும் பயனுள்ளதாக, சிரமம் தராததாக உள்ளதா? அப்படியானால், புதியதாக ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கும் வரை இதனையே பயன்படுத்தவும். மேலும், உங்கள் விண்டோஸ் 7 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் டச் ஸ்கிரீன் இருக்காது. விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்கள், டச் ஸ்கிரீன் இல்லாமல் இயங்கினாலும், பல வசதிகள் உங்களுக்குக் கிடைக்காது. எனவே, விண்டோஸ் 7 உடன் உங்கள் பயணம் சில காலத்திற்குத் தொடரட்டும். 3. விண்டோஸ் 8 சோதனை சிஸ்டம்...

Touch செய்ய முடியாத screen களை Touch Screen களாக மாற்ற E-touch Pen..!

Image
  பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்கு நான் எதோ உங்களை ஏமாத்துவது போல இருக்கும், ஆனால் நான் உண்மையைத் தான் கூறுகிறேன். Jeswill HiTech Solutions Pvt. Ltd. என்ற நிறுவனம் E-touch pen என்ற கருவியை உருவாக்கியுள்ளது.. Microsoft நிறுவனம் புதிதாக வெளியிட்டிருக்கும் Windows 8 ஐ பல பேர் பாவனை செய்கிறார்கள். ஆனால் அதன் உண்மையான அனுபவத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் தொடுதிரையான monitor அல்லது laptop வாங்குவது என்பது மினக்கெட்ட வேலை. காசு நிச்சயமாக இந்திய ரூபாய் 1௦௦௦௦ க்கு கிட்டத்தட்ட வரும். ஆனால் இந்தக் கருவி குறைந்த விலை அதாவது கிட்டத்தட்டஇந்திய ரூபாய் நான்காயிரம் அப்படித் தான் வரும். இந்தக் கருவி பற்றித்தான் நாம் சற்று இங்கு பாப்போம்... இது ஒரு பேனாவைப் போன்ற வடிவம் கொண்டது. இதில் ULTRA SOUND , infrared தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. இது விண்டோஸ் 8 க்கு என வடிவமைக்கப்பட்டது. இந்தப் பேனாவை  விசேசமாக R efill , Battery என்பனவற்றுடன் வரும் நீங்க தொடுதிரையாக மாற்ற மூன்று சாதனங்கள் இதையும் சேர்த்து வரும்... Base Unit ஒன்று வரும்... USB Cable.. இந்த...

இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றலமா..?

Image
சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான பைல்களை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம். அவை அனைத்தையும் ஒரே பைலாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. அப்ளிகேஷனை தரவிறக்க சுட்டி   அப்ளிகேஷனை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளவும். Setting பொத்தானை அழுத்தி Security Settings எனும் டேப்பினை பாஸ்வேர்டு உள்ளிட்டு இறுதியாக Convert Now பொத்தானை அழுத்தவும். தற்போது பாஸ்வேர்டு குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு பாஸ்வேர்டு உள்ளிடப்பட்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு வாட்டர்மார்க் இட்டுக்கொள்ளவும் முடியும்.

பிடிஎப் (PDF) பைல்களை பிரிக்க, சேர்க்க மற்றும் பக்கங்களை மறுவரிசைப்படுத்தலமா..?

Image
பிடிஎப் பைலினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் பிடிஎப் பைல்களில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் பைலினை விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறக்கவும். Plugins வரிசையின் கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்தி பிடிஎப் கோப்பினை தேவைகேற்ப தலைகீழாக மாற்றவும், பிரிக்கவும், இணைக்கவும் வேண்டியவாறு பக்கங்களை திருத்திக்கொள்ளவும். இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பிடிஎப் கோப்புகளை திருத்தம் செய்வதற்கு அருமையான மென்பொருள் ஆகும்.