Posts

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க

Image
இந்திய கட்டிட கலைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம்முடைய கட்டிட கலைகளை காண்பவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நம் நாட்டிருக்கு படை எடுக்கின்றனர். தமிழகத்திலும் பல பிரசித்தி பெற்ற கோவில்களும்,தேவாலயங்களும், மசூதிகளும்  நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம் வாருங்கள்.  இந்த சேவையை பிரபல செய்தி நிறுவனமான தினமலர் நமக்கு வழங்குகிறது.  இந்த தலத்தில் சுமார் பிரசி பெற்ற 50 கோவில்களை நாம் 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்கலாம்.  தமிழத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சில தளங்களும் இந்த பட்டியலில் உள்ளது.  இந்த இணைய தளத்திருக்கு சென்று உங்களுக்கு தேவையான கோவிலின் மீது க்ளிக் செய்தால் அந்த கோவிலை நீங்கள் 360 டிகிரி கோணத்தில் பார்த்து கொள்ளலாம். இந்த முறையில் நாம் பார்க்கும் பொழுது கோபுரத்தின் மீது உள்ள சிற்பங்களை கூட தெளிவாக பார்க்க முடியும். இந்த வசதி நேரில் சென்று பார்த்தல் கூட கிடைக்காது.  இதற்க்கு உங்கள் இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் ...

அனைத்து கணினிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்- Auto Shutdown

Image
இன்றைய உலகில் கணினி உபயோகிக்காத இடமே இல்லை. சிறிய கடைகள் முதல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் வரை உபயோகித்து கொண்டிருக்கும் இந்த கணினியின் செயல் பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நம் கணினியில் நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நம் கணினியில் அவசியமாகிறது. பயன்கள் :  நாம் கணினியில் வேலை செய்து கொண்டு இருப்போம் திடீரென ஏதோ ஒரு முக்கியமான வேலையோ அல்லது ஞாபக மறதியாலோ நம் கணினியை அணைக்காமல் சென்று விடும். நம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணினியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.  அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணினி தானாகவே Shutdown செய்யப்படும். இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது அது டௌன்லோட் ஆகும் வரை காத்திருக்காமல் Time Remaining பார்த்து அதற்கேற்ற படி நேரத்தை செட் செய்து விட்டால் டவுன்லோட் ஆகி முட...

ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

Image
முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள். 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது. 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய பிளாக்குகள் துவக்கப்படுகின்றன. 694,445 தேடல்கள் கூகுள் தேடியந்திரத்தில் நிகழ்கிறது. 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகிறந்து.மற்றும் 510,040 புதிய கமெண்ட்டுகள் பேஸ்புக்கில் போடப்படுகிறது. 98,000 புதிய Tweets...

இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்

Image
ஏதேதுக்கோ இணையதளங்கள் வந்து விட்ட நிலையில் இந்தயாவில் உள்ள ஊர்களின் பின்கோடுகளை அறிய ஒரு தேடியந்திரம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. பின்கோடுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று ஏதோ கொரியர் அனுப்பவோ அல்லது லெட்டர் அனுப்ப நேரிட்டால் இந்த பின்கோட் என்பது மிகவும் கட்டாயமான ஒன்று சில நேரங்களில் இந்த பின்கோடுகள் தெரியாமல் நாம் சிரம பட்டிருப்போம்.  இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஒரு தேடியந்திரம் உள்ளது. இதில் நமக்கு தேவையான ஊர்களின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும் உடனே  அந்த ஊரின் பின்கோட் வந்துவிடும். இந்த தளத்திற்கு சென்றவுடன் அங்கு இருக்கும் காலி கட்டத்தில் உங்களுக்கு தேவையான ஊரின் பெயரை பிழையின்றி ஆங்கிலத்தில் டைப் செய்து உங்கள் கீபோர்டில் உள்ள என்ட்டர் தட்டவும். என்ட்டர் அழுத்திய அடுத்த நொடியே உங்கள் ஊருக்கான பின்கோட் வந்துவிடும் இது போல உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் தேடி கொள்ளலாம். இதில் நாம் கொடுக்கும் ஊரின் வரைபடமும் சேர்ந்து வருவது இதன் கூடுதல் சிறப்பு. மற்றும் இதில் பின்கோட் தவறாக இருந்தாலோ அல்லது ஏதாவது ஊருக்கு பின்கோட் இல்லாமல் ...