Posts

அவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக

Image
வைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணினியை காப்பாற்ற அனைவரும் எந்த நிறுவனத்துடைய ஆன்டிவைரஸ் மென்பொருளையாவது பயன்படுத்தி வருவோம். ஒருசிலர் மட்டுமே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம். அவ்வபோது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர். அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதன்னுள்ளேயே இருக்கும். இன்ஸ்டால் செய்யும் போது லைசன்ஸ் கீக்கான பைலை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். சாதாரணமாக இந்த மென்பொருளின் சந்தை விலை $39.99 ஆகும். இந்த அவாஸ்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளானது நம்முடைய கணினியை வைரஸ்களிடம் இருந்து முழுமையாக காபாற்ற கூடியது ஆகும்.

RUN கட்டளையை பயன்படுத்தி புரோகிராமினை எளிதாக திறக்க

Image
நமது கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு புரோகிராமினையும் திறப்பதற்க்கு நாம் Start->All Programs வழியாக சென்று தான் ஒப்பன் செய்ய வேண்டும். இதனால் நேரம் விரயம் ஆகும். அதிகப்படியான புரோகிராம்கள் நிறுவப்பட்ட கணினியில் நமக்கு தேவையான புரோகிராமினை தேடி கண்டுபிடித்து திறக்க நேரம் ஆகும். இந்த அனுபவம் எரிச்சலுட்டும் வகையில் அமைந்துதிருக்கும். கணினியில் புதியவர்களுக்கு ஒருவிதமான வெறுப்பினை உருவாக்கும். இதனை தவிர்க்க நாம் Run புரோகிராம் மூலம், எளிதாக திறக்கலாம். Run பாக்சை திறக்க Winkey+R ஒரு சேர அழுத்தினால் Run Box ஒப்பன் ஆகும். நமக்கு ஒரு சில புரோகிராம்களுக்கு மட்டுமே shorcut தெரியும் உதாரணத்திற்க்கு Ms-Word க்கு winword, Paint க்கு mspaint இதை போல நாம் விரும்பும் ஒவ்வொரு புரோகிராம்க்கும் shorcut உருவாக்க முடியும். இதற்கு AddToRun என்ற புரோகிராம் உதவுகிறது. மென்பொருளை பதிவிறக்க : AddToRun மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். செய்தவுடன் படம் 1 ல் உள்ள விண்டோ போல் தோன்றும். படம்-1 அதில் Select the Program என்பதில் எந்த புரோகிராமினை திறக்க வேண்டுமோ அதனை தேர்...

ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க

கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது. வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. வன்தட்டினை முறையாக பிரிக்கவும். பிரித்த வன்தட்டில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager. மென்பொருளை தரவிறக்க சுட்டி     இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டியபடி வன்தட்டினை முறைப்படுத்தி கொள்ளவும். இந்த மென்பொருள் பீட்டா பதிப்பாகும். மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டு...