Posts

Showing posts from November, 2014

எக்ஸ்சல் பார்முலா ஒரு பார்வை..

அடிக்கோடு : எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது.  இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cell s என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும்.  இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும். COMBIN பார்முலா : எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க ...

கணணியை சிதைக்கும் எபோலா வைரஸ்

Image
உலக அளவில், உயிர்க் கொல்லி நோயைப் பரப்பும் எபோலா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும், மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், கம்ப்யூட்டரை இது பாதித்து வருகிறது என்ற செய்தி வியப்பைத் தந்து கொண்டிருக்கிறது.  உண்மை என்னவென்றால், எபோலா வைரஸ் குறித்து பல போலியான இமெயில்கள், உலகெங்கும் வலம் வருகின்றன. ”எபோலா பற்றி, உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் தந்துள்ளது. இதை அவசியம் படியுங்கள்.  மற்றவர்களுக்கும் பரப்புங்கள்” என்ற எச்சரிக்கை மெயில் ஒன்று வருகிறது. அறிக்கை குறித்துப் படிக்க லிங்க் ஒன்றும் தரப்படுகிறது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், உடன் மால்வேர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, கம்ப்யூட்டரின் இயக்க கட்டுப்பாட்டினை, அஞ்சல் வழியாக இன்னொருவருக்கு அனுப்புகிறது.  உங்கள் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், அதற்கான பாஸ்வேர்ட் எண், கிரெடிட் கார்டு எண் என அனைத்து தனி நபர் தகவல்களும் செல்கின்றன. இதனால், அனைத்து வழிகளிலும் இழப்பு ஏற்படுகிறது.  எனவே, இத்தகைய மெயில் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தாலோ, அல்லது உங்கள் ஸ்மார்ட் போன...