சுருக்குச் சொற்களை அறிய தரும் இணையதளம்


இன்றைய நடப்பில், பல நிறுவனங்கள் அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே (acronyms) ஆங்கில மொழியில் அழைக்கப்படுகின்றன. ஏன், பல பொருட்கள், பல கருத்துருக்கள், பல இடங்களும் சுருக்குச் சொற்களாலேயே சுட்டிக் காட்டப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்குச் சொற்கள் நம் அனைவருக்கும் தெரிந்தவையாகவே இருக்கின்றன. ஆனால், இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நாம் நூல்களைப் படிக்கையிலும், இணையத்தில் சில கட்டுரைகளைப் படிக்கையிலும் பல விஷயங்களை அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே தெரிந்து கொள்கிறோம். 

அவற்றின் விரிவாக்கம் என அந்த நூல்களில் தரப்படுவதில்லை. வாசகர்களுக்குத் தெரியும் என அவற்றை எழுதியவர்கள் விட்டுவிடுகிறார்கள். அல்லது விரிவாக்கம் தெரிந்து என்ன ஆகப் போகிறது. விஷயம் தெரிந்தால் போதும் என்றும் விட்டுவிடுகிறார்கள். அப்படி ஒன்றை நாம் சந்திக்கும்போது, அவற்றின் விரிவாக்கத்தினை அறிந்து கொள்ள உதவும் வகையில் இணைய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் All acronyms. இது கிடைக்கும் முகவரி 

இந்த தளத்தில் சென்றவுடன் இதில் கிடைக்கும் சுருக்குச் சொற்களின் எண்ணிக்கையும் அவற்றின் விரிவாக்கமும் தான். 28 லட்சத்து 84 ஆயிரம் சுருக்குச் சொற்கள், ஏறத்தாழ 2,000 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. இதனைப் பார்த்தவுடனேயே, அதனை புக்மார்க் செய்திடும் ஆவல் ஏற்படும்.

இதன் தலைப்பில் நாம் தேடிப் பெறுவதற்கான தேடல் கட்டம் தரப்படுகிறது. இடது பக்கம், Topics, Popular,Random, and Suggest என நான்கு தலைப்புகளில் நாம் இவற்றைப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. இவை போக, அன்றைய தினத்தில் அதிகம் தேடப்பட்டது என ஐந்து சுருக்குச் சொற்கள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் கீழாக அகர வரிசையில் தேடி அறியும் வழிகளும் கிடைக்கின்றன. இன்னும் பல வசதிகள் நம் தேடலை எளிமையாகவும் விரைவாகவும் அமைக்கின்றன. இன்றே இந்த தளம் சென்று பார்த்து உங்கள் குழந்தைகளுக்கும் இதனைப் பயன்படுத்தக் கற்றுத் தரவும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS