RAM மற்றும் ROM வித்தியாசம் தெரியுமா..?
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்ற...