அனைத்து வித போன்களையும் எந்த சாதனமும் இன்றி உலவு பார்ப்பது எப்படி ?
Samsugn android mobile தொலைந்து போனால் அது இருக்கும் location ஐ கண்டுபிடிப்பது எப்படி என்பதை முன்னர் எழுதியிருந்தோம் . அது நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ”சைனா போன் முதல் Samsung போன் வரை எல்லாத வித போன்களும் தொலைந்து போனால் அதன் location ஐ track செய்து எப்படி என்பதையும் அல்லது மற்றவர்களின் போன்களை track (உலவு) செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம். இதற்கு முதலில் உங்கள் போன் Android போனாக இருக்க வேண்டும். கூகுள் இதற்கென தற்போது புதிய ஆப்சனை ஆன்ட்ராய்டு மென்பொருளில் Android Device Manager என்ற பெயரில் சேர்த்துள்ளது. Android Setting ல் Android Device Manager என்பதை தேர்வு செய்து பின் வரும் ஆப்சன்களை Select செய்து கொண்டு Activate செய்யவும். அவ்வளு தான் முடிந்து விட்டது. இனி உங்கள் போனை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம். போனை Ring செய்து கொள்ளலாம். போனில் உள்ள தகவல்களை அழித்துக் கொள்ளலாம். போனை யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் lock செய்து கொள்ளலாம். போன் எங்குள்ளது என்பதை track செய்து கொள்ளலாம். பின் வரும் படங்களை பார்க்கவும்...