விண்டோக்களை மூடும் வழிகள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து வைத்து செயல்படுவது நம் வழக்கமாகிவிட்டது. இது நம் வேலைத் திறனை ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம்.

பல வேளைகளில், நாம் பணியாற்றும் விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7 இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது.

இந்த வழிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் செயல்பாடு, நாம் செயல்படும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் சுருக்கி வைப்பது. இரண்டாவது அனைத்து விண்டோக்களையும் சுருக்கி வைப்பது.


1. ஏரோ ஷேக் (Aero Shake):

விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்பு தரும் ஒரு நவீன தொழில் நுட்ப வசதி இது. நீங்கள் செயல்படும் விண்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் மேலாக உள்ள பிரிவில், லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் மவுஸை சற்று அசைக்கவும். விண்டோவும் அசையும்.

இப்போது, நீங்கள் செயல்பட்டு, ஷேக் ஆகும் விண்டோ தவிர திறந்திருக்கும் மற்ற விண்டோக்கள் அனைத்து விண்டோக்களும் மறைந்து போகும். இந்த வசதி விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், ப்ரபஷனல், அல்ட்டிமேட் மற்றும் என்டர்பிரைஸ் எடிஷன் பதிப்புகளில் மட்டும் கிடைக்கிறது.


2. விண் +ஹோம்:

உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் 7 பதிப்பில் ஏரோ ஷேக் வசதி இல்லையா? கவலைப்பட வேண்டாம்; இந்த விண்டோக்களை மூடும் வேலையை இரு கீகள் மூலம் மேற்கொள்ளலாம். Win + Home கீகளை ஒரு சேர அழுத்தவும்.

செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மறைவதைப் பார்க்கலாம். விண் ஷேக் வசதி விசேஷமாக உள்ளதே; ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் அது இல்லையே என்று கவலைப்பட்டு, அந்த வசதியினை அனுபவிக்க வேண்டும் என எண்ணினால், விண்ஷேக் என்ற அப்ளிகேஷன் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரிhttp://members. chello.nl/h.h.j.f.beens/WinShake/Functions.htm


3. விண்டோக்களைச் சுருக்க:

திறந்திருக்கும் அனைத்து விண்டோக் களையும் சுருக்கி டாஸ்க்பாருக்குக் கொண்டு செல்ல வேண்டுமா? நீங்கள் அழுத்த வேண்டிய கீகள் Win + D. மீண்டும் இந்த விண்டோக்கள் எழுந்து கொள்ள, அதே கீகளை மீண்டும் அழுத்தவும்.


4. டெஸ்க் டாப் காட்டும் பட்டன்:

அடுத்து இது தொடர்பான இன்னொரு வசதியையும் விண்டோஸ் 7 சிஸ்டம் தருவதனைப் பார்க்கலாம். இதன் டாஸ்க்பாரின் முடிவில், விண்டோஸ் கடிகாரம் அருகே, ÷ஷா டெஸ்க்டாப் பட்டன் இருப்பதனைக் காணலாம். இந்த பட்டன் அருகில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று அதனைச் சற்று சுற்றவும்.

இப்போது திறந்திருக்கும் விண்டோக்கள் அனைத்தும் ஒளி ஊடுருவும் தன்மையுடன் (ட்ரான்ஸ்பரண்ட்) காட்டப்படும். இந்த வசதியில், நாம் எந்த விண்டோவினையும் மினிமைஸ் செய்திடாமல் பார்க்கலாம். இந்த பட்டனில் கிளிக் செய்தால், அது அனைத்து விண்டோக்களையும் உடனே மூடிவிடும். மீண்டும் கிளிக் செய்தால், திறக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?