C மொழித் தந்தை டென்னிஸ் ரிச்சி பற்றிய தொகுப்பு
படித்ததில் பிடித்தது “It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.” - Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’) வணக்கம் நண்பர்களே..! கணினி நிரலாக்க மொழிகளில் முதன்மையான C மொழியை உருவாக்கிய டென்னிஸ் ரிட்ச்சி பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது. எனக்கு பிடித்த இயங்குதளம் விண்டோஸ்தான் என்றாலும் அலுவலகத்தில் தினசரி அதிகப்படி பயன்படுத்த நேர்வது லினக்ஸ்தான். நேர்முகத் தேர்வுகளில், பிடித்த ஏதேனும் மொழியில் குறிப்பிட்ட விஷயத்துக்கு நிரல் எழுதச் சொன்னபோதெல்லாம் C மொழியையே தேர்ந்திருக்கிறேன். நான் மற்றவர்களை நேர்காணல் செய்ய நேர்ந்தபோதும் இதே கேள்விக்கு C மொழி பயன்படுத்தி எழுதியவர்கள்பால் தனியானதொரு வாஞ்சை ஏற்பட்டிருக்கிறது. எண்ணங்களிலும் செயல்களிலும் ஊறிப்போயிருக்கும் இத்தொழில்நுட்பங்களின் ஆதிவடிவங்களை ஆக்கியவர் டென்னிஸ் ரிட்ச்சி – ஒன்று C மொழி; மற்றது யூனிக்ஸ் இயங்குதளம். இவைதவிர அவரது முக்கியமான ஆக்கம் என நான் கருதுவது அவரது புத்தகங்களை: The C ...