Posts

Insert key யின் பயன்பாடு என்ன?

Image
விசைப் பலகையின் வலது புற்ம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பய்ன்பாடு என்ன என்பதை அறிவீர்களா? டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில (Word Processor) வேர்ட் ப்ரொஸசர்களில் எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும்.. அல்லா விடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (Overwrite) அழித்து விடும்.. எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும். Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும். அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம். எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overwrite நிலையிலா இருகிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும். ஸ்டேட்டஸ் பாரில் OVR என இருப்பின் அது Overwrite நிலைய...

கம்ப்யூட்டரிலிருந்து பைல்களை முழுமையாக நீக்க ஷ்யூர் டெலீட்

கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் உருவாக்கிய பைல் ஒன்றை டெலீட் செய்துவிட்டீர்கள். அது அழிந்து போய்விட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? யாரும் பார்க்க முடியாதபடி காணாமல் போய்விட்டதா? இல்லை, இல்லவே இல்லை. அந்த பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று தங்கலாம். நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், அதிலிருந்தும் அழித்துவிட்டிருக்கலாம். ஆனால் அப்போதும் அது கம்ப்யூட்டரிலிருந்து அழிவதில்லை. உங்கள் கம்ப்யூட்டர் அதனை அழிப்பதில்லை. அதற்குப் பதிலாக, அந்த பைல் இருந்த இடத்தை, அடுத்த பைல் வந்து தங்கலாம் என்று அறிவிக்கிறது. எனவே திறமையாக எழுதப்பட்ட ஒரு புரோகிராம் அந்த பைல் இருக்கும் இடத்தை, விதத்தை அறிந்து. பின் மீண்டும் மீட்டு உங்களுக்குத் தரலாம். அல்லது அடுத்தவர்கள் அதனைக் கண்டறியலாம். குறிப்பாக இந்த பைல்களில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களான, பேங்க் அக்கவுண்ட் எண், பாஸ்வேர்ட் ஆகியவை இருந்தால் அவை எந்த நிலையிலும் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது. எப்படி ரகசியசெய்தி எழுதிய தாள் ஒன்றை நாம் கிழித்துப் போட்டாலும், பொறுமையான நபர் ஒருவர் அந்த துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, ஒட்...

கன்வர்ட் -

Image
கன்வர்ட் (Convert) என்பது அலகு மாற்றம் செய்யும் ஒரு சிறிய கருவி. இதன் முலம் பல வகையான அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது தூரம், வெப்பம், கனவளவு, நேரம்,வேகம், திணிவு, வலு, அடர்த்தி, அமுக்கம், சக்தி போன்ற பல வகையான .அலகுகளை இலகுவாக மாற்றிக் கொள்ளும் வசதியை இது தருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் பயன் படக் கூடிய பல வகையான அலகு மாற்றிகளை இது கொண்டுள்ளது. கன்வர்ட் எனும் இந்த இலவச மென்பொருள் கருவியை www. joshmadison.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Zip பைலாகக் கிடைக்கும் இது 152 கிலோ பைட் பைல் அளவைக் கொண்டுள்ளது.

Cache Memory எனறால் என்ன?

Image
  கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது. (Cache எனும் இந்த ஆங்கில வார்த்தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்) ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சிபியூ இந்த கேஷ் மெமரியைப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது. கணினியில் கேஷ் மெமரி பயன் படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் டேட்டாவைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் மதர்போர்டிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளை சீபீயூ பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீபீயூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத...