Posts

Showing posts from 2017

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்..

Image
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதற்கு புதியதாக ஆன்ட்ராய்ட் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்'ல் மின் கட்டணம் செலுத்துதல், மின் உபயோகத்தை தெரிந்துகொள்ளுதல், பயன்படுத்தபட்ட மின் அளவை உள்ளிட்டு மின் கட்டணத்தை தெரிந்துகொள்ளுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.. மிக எளிமையான கட்டமைப்பினைப் பெற்றுள்ளது. அதனால் பயன்படுத்துவது எளிது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் Android App Download செய்ய..

பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்

Image
இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். பெண்கள் பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க  என்ன வழிகளை பின்பற்றலாம் என்று பார்க்கலாம். இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். இதில் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. காலையில் பேப்பரை திறந்தால் நிச்சயம் அதில் பேஸ்புக் நண்பரிடம் கற்பை இழந்த மாணவி, பேஸ்புக் காதலால் வந்த விபரீதம் அப்படி இப்படின்னு நிறைய செய்திகளை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். இவையனைத்துக்கும் முக்கிய காரணம் பெண்கள் தமக்கு அறியாத நபர்களின் Friend Requests யை ஏற்றுக்கொள்வது தான். இப்படி பெண்கள் ஏற்றுக் கொண்டவுடன் உடனே பெண்களின் இன்பாக்ஸூக்கு போய் Hi.. அப்படின்னு ஆரம்பிப்பாங்க அந்த ஆண்கள், அதுல இருந்து தான் தங்களது வேலையை இவுங்க ஆரம்பிப்பாங்க. இதோ அவுங்க என்னவெல்லாம் செஞ்சி பெண்களை கவுக்கறாங்கன்னு பாக்கலாம் வாங்க..... இன்பாக்ஸ்ல போய் Good morning, Good night சொல்லி ஜொல்லு ஊத்துவாங்க இவுங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும் தப்பி தவறி அவுங்களுக்கு ரிப்ளே பண்ண...

Zoobe Cartoon - Voice நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்..

Image
நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்.. உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல்ல ப்ளேஸ்டோர்'ல போய்  Zoobe Cartoon - Voice' ன்ற அப்ளிகேஷன இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.. அதோட லிங்க் . இன்ஸ்டால் பண்ணிட்டு.. உங்களுக்குன்னு ஒரு ஓன் அக்கௌன்ட் இந்த  Zoobe Cartoon - Voice ஆப்'ல துவங்கிக்கோங்க.. அப்புறம் எந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் புடிச்சிருக்கோ அதா கிளிக் பண்ணி.. உங்க குரலை பதிவு செய்ங்க.. அப்புறம் ஆட்டோமேட்டிக்கா உங்களோட குரலுக்கு தகுந்தாற் போல அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் தனது முக பாவங்களை வீடியோவாக வெளியிடும்.. அதனை நம் கேலரியிலும் சேமித்து கொள்ள முடியும்.. ஷேர் என்ற பட்டனை தொடர்ந்து பல சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டா, வாட்ஸப், பேஸ்புக் மெஸங்ஜர், போன்ற அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம் நண்பர்களே..!! குறிப்பு : சில கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர்களின் டெம்ப்ளட்டுகள் குறைந்தபட்சம் Rs.80.00'ஐ செலுத்தினால் மட்டுமே நாம் அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டரை பெறமுடியும்..!! உங்கள்- கௌரிசங்கர் குணசேகரன் 

இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் ஒரு பார்வை

Image
AV Test Institute என்ற இந்நிறுவனம் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் செயலிகளை அதன் தரம், செயல்படும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் இயங்கும் முதல் 5 தரமான ஆன்ட்டி வைரஸ் செயலிகள் பட்டியலிட்டுள்ளது. இந்த செயலிகள் மால்வேர்களை தடுப்பது, வைரஸ் இணையத்தளங்களை சுட்டிக்காட்டுவது, புதிய வைரஸ்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை கம்ப்யூட்டருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பது போன்ற அருமையான செயல்களை செய்யவல்லவை. கட்டணம் கொடுத்துப் பெறப்படும் அனைத்து வசதிகளும் இந்த இலவச ஆன்ட்டி வைரஸ் செயலியில் இருப்பதுதான் அதன் சிறப்பம்சம். 1. கொமோட ஆன்ட்டி வைரஸ். 2. இசெட் என்.ஓ.டி. 32 3. பிட் டிபண்டர் 4. பண்டா ஆண்ட்டி வைரஸ் 5. அவிரா கொமடோ ஆண்ட்டி வைரஸ் இந்த (Comodo's free antivirus) செயலியைப் பொறுத்தவரை, கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பில் என்ன அம்சங்கள் உள்ளனவோ, அதே அம்சங்கள், இலவசமாகத் தரப்படும் பதிப்பிலும் தரப்பட்டுள்ளன. எனவே, பெரும் பாலோனவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரப்பட்டுள்ள இரு தொழில் நுட்பங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. அவை, Host ...

ப்ளாக்கரில் புது தீம்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.. New Theme Templates on Google Blogger..

Image
ப்ளாக்கர் தளத்தில் புதிய வசதிகள் அவ்வப்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ப்ளாக்கர் தளங்களுக்கான புதிய டெம்ப்ளேட்களை ப்ளாக்கர்வெளியிட்டுள்ளது. மூன்றாம் நபர் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தும்பொழுது, மால்வேர், வைரஸ் போன்ற பிரச்னைகள் வருவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் ப்ளாக்கர் தளத்தில் உள்ள டெம்ப்ளேட்களில் அதுபோன்ற எந்த ஒரு நிரல்களும் இல்லை. பயன்படுத்துவதும் சுலபம். புதிய தீம்களை பயன்படுத்துவது எப்படி? ப்ளாக்கர் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள்.  தீம்ஸ் என்பதை கிளிக் செய்து பாருங்கள். அதில் Contempo, Soho, Emporio, Notable என்ற நான்கு வகைகளில் தீம்கள் வெளியிடப்பட்டிருக்கும். அவற்றில் பிடித்தமான தீமை செலக்ட் செய்து அப்ளை செய்துகொள்ளலாம்.  நவீன வசதிகளுடன், மிக எளிமையான தீம்களை வடிவமைத்துள்ளனர், பார்ப்பதற்கும் அற்புதமாக உள்ளது. குறிப்பு: புதிய தீம் அப்ளை செய்யும் முன்பு, உங்களுடைய பழைய தீமை(டெம்ப்ளேட்டை) ஒரு முறை டவுன்லோட் செய்துகொள்வது நல்லது. புதிய தீம் மாற்ற முயற்சிக்கும்பொழுது, பழைய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட...

கணினி பாதிப்பிலிருந்து கண் தப்பிக்க பாதுகாப்பு பயிற்சிகள்..

Image
கணினி ரேடியசனிலிருந்து கண்களை பாதுகாத்திட உதவும் கண்பாதுகாப்பு பயற்சிகள்: தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு அளிப்பதில்லை. இதனால் வெகு விரைவில் கண்கள் பாதிக்கப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க போதுமான இடைவெளியில் கண்களை கம்ப்யூட்டர் திரையிலிருந்து விலக்கி வேறு திசைக்கு பார்வையை செலுத்த வேண்டும். இதற்கு 20-20 பார்முலா உதவும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை தூரத்திலிருக்கும் பொருளின் மீது பார்வையை செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி, உடலுக்கு பயிற்சி அளிப்பது போல கண்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் கண்கள் தேவையான புத்துணர்வு பெறுகிறது. கண்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி? கண்களை இரு புறமும் பக்கவாட்டில் (கிடைமட்டம்) முடிந்த அளவிற்கு கடைசி வரைக்கும் பார்வையை செலுத்துதல் கண்களை மேலும் கீழும் அசைத்து (செங்குத்தாக) பார்வையை செலுத்துதல் கண்களை வலது புற தோள்பட்டையிலிருந்து இடதுபுற கால் பட்டையை நோக்கி மேலிருந்து கீழாக செலுத்துதல். கண்களை இடது புற தோள்பட்டையிலிருந்து வலதுபுற கால் பட்டையை நோக்கி மேலிருந்து கீழாக செலுத்துதல். கண...

அதிரடி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் ப்ளான் வெளியீடு..!!

Image
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும். மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் புதிய ப்ரைம் சந்தா வெளியிடப்பட்டது. அதாவது, ஆண்டுதோறும் ரூ.99/- என்ற ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் தவிர்த்து ரூ.303/- என்ற மாதக் கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் மூலம் வழக்கமான அதே சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவை பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பிரைம் இல்லா வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் சலுகைகள் வேறு வகைகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாள் திட்டமாக, பிரைம் சந்தாதாரர்கள் ரூ.19க்கு 200ஜிபி டேடாவை உபயோகிக்கலாம் என்றால், பிர...

வாட்சப்பில் வந்துள்ள புதிய ஸ்டேடஸ் வசதியை எவ்வாறு பயன்படுத்துவது..??

Image
உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.  இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  எப்படி இந்த வசதியைப் பெறுவது?  இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.  எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.  உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால்...